இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

13.வண்ணங்களின் சங்கமம் The Secret Treaty of Colours.

 13.வண்ணங்களின் சங்கமம் The Secret Treaty of Colours. நீ உடுத்தும் ஆடை வண்ணத்தில் -  அன்று நானும் உடுத்தினேன்  அதே வண்ணத்தில்! யாரும் அறியா  ஒரு ரகசிய ஒப்பந்தம்! உலகிற்கு அது -  வெறும்  ஒரே நிறத்து ஆடைகள்! உனக்கும் எனக்கும்  மட்டுமே தெரியும் -  அது ஒரே திசையில்  துடிக்கும்  இதயங்களின் அடையாளம்! நீலமோ,  சிவப்போ அல்லது  தூய வெள்ளையோ... வண்ணங்கள்  எதுவாக இருந்தாலும் -  அங்கே வெளிப்பட்டது  என்னவோ  நம் காதலின்  ஒரே வண்ணம் தான்! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

12.வாசனையாய் உன் நினைவில்... Scented Memories: A Fragrant Reminder....

 12.வாசனையாய் உன் நினைவில்... Scented Memories: A Fragrant Reminder.... உன் நினைவுகளின் ஏதோ  ஒரு மூலையில் நான் இருந்தால்  அது எனக்குப் போதும்! ஆனால் -  நான் பூசிக் கொள்ளும் வாசனைத் திரவியங்கள்  கூட உனக்கு  என் நினைவைச் சொல்கிறதாமே? அப்படியென்றால்... இன்று முதல்  நான் வாசனைத் திரவியங்களால் நீராடுகிறேன்! என் உடல் முழுவதும் இந்த வாசனையைப்  பூசிக்கொள்கிறேன்... காற்று வீசும் திசையெல்லாம் என் நினைவுகள்  உன்னை வந்து சேரட்டும்! நான் அருகில்  இல்லாவிட்டாலும் இந்த வாசனை -  உன்னிடம் என் காதலைச்  சொல்லிக் கொண்டே  இருக்கட்டும்! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026.

11. இசை‌ விருந்து! The Melodic Feast!

 11. இசை‌ விருந்து!       The Melodic Feast! இன்று இரவு - என் பசிக்காக நான் உணவு  ஏதும் உண்ணவில்லை!  வெறும் சோறு -  இந்தப் பித்துப் பிடித்த  மனதின் பசியைத் தீர்க்கவில்லை!! காற்றோடு மிதந்து  வந்த இசையையே -  அமுதமாக அருந்தினேன் இன்று!!! பாடல்கள் தந்த விருந்து; வயிறு நிறையவில்லை -  ஆனால் மனது நிறைந்து போனது!!!! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

4.மௌனத்தின் மொழி! A Poem Between Breaths!

 4.மௌனத்தின் மொழி! A Poem Between Breaths! காதல் கவிதைகள்  எழுத -  என் கை விரல்கள் இடற- எழுதாதே என்று சொல்ல -  எனது மனது மட்டும்  இடம் கொடுக்கவில்லை! மௌனத்தின் மொழி வார்த்தைகள் மௌனத்தில் உறைந்தாலும், சுவாசம் உன்னையே கவிதையாய் சுவாசிக்கிறது; பேனா முனை முடங்கிப் போனாலும், இதயத் துடிப்போ  உன் பெயரைத் தான் இடைவிடாமல்  எழுதிக் கொண்டிருக்கிறது! சொல்லத் துடிக்கும் காதலுக்கும் -  அதைச் சுமக்கத் தெரியாத காகிதத்திற்கும்  இடையே, கைவிடப்பட்ட கவிதையாய் -  நான் உன் நினைவுகளில் தத்தளிக்கிறேன்! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்  முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

10.சொல்லாதச் சொல்! The Tug of War!

  10.சொல்லாதச் சொல்! The Tug of War! “சொல்லிவிடு” -  என்று  துடியாய்த் துடித்து  இதயம்  என்னைத் தூண்டுகிறது! “சொல்லாதே” -  என்று  விளைவுகளை எண்ணி  உள்ளம் என்னைத் தடுக்கிறது! சொல்லிவிட்டால்...  என் பாரம் குறையலாம்! சொல்லாமல் போனால்...  உன் நட்பு நிலைக்கலாம்! சொல்லவா? வேண்டாமா?  வெல்லப் போவது  இதயத்தின் ஆசையா?  இல்லை...  உள்ளத்தின் எச்சரிக்கையா? இருதலைக் கொள்ளி எறும்பாய் நான்... சொல்லத் துடிக்கும் வார்த்தைகளை மௌனத்தால் மூடி வைத்து -  உன் முன்னால்  ஊமையாய் நிற்கிறேன்! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

9.நினைவுகளின் நிழல்! Shadow of Memories!

 9.நினைவுகளின் நிழல்! Shadow of Memories! “நிஜங்களின் பிரிவை விட நிழல்களின் துணையே மேலானது... நீ என்னோடு இல்லாத நேரங்களில் உன் நினைவுகள் தான் என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன!” “யாரும் இல்லாத தனிமையில் யாரோ ஒருவரின் நினைவோடு வாழ்வது சுகமானது... நீ தந்த வலிகளை விட உன் நினைவுகள் தந்த மௌனங்களையே அதிகம் காதலிக்கிறேன்!” “உலகம் என்னை தனிமை என்று சொன்னாலும் உன் நினைவுகளால் - நான் நிறைந்தே இருக்கிறேன்... பிரிவு என்பது உடலுக்குத் தான் நினைவுகளுக்கு அல்ல!” ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்  முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026.

8. சத்தங்களின் அடையாளம்! Echoes of Reality

8. சத்தங்களின் அடையாளம் Echoes of Reality  வாழ்க்கைப் பயணத்தின் சந்தடியில் - நாம்எத்தனையோ சத்தங்களைக் கடந்து போகிறோம்! காற்றோடு கரையும் பல ஓசைகளில் - சிலகாலம் கடந்தும் இதயத்தில் தங்கி விடுகின்றன! இன்று காலை  நண்பனிடம் போனில் பேசும் போது  நடுவே புகுந்தது  அந்தப் பேருந்தின் 'ஹார்ன்' சத்தம்! "அது NS விஜய் தானே?" என்று -  நான்அடுத்த நொடியே கேட்டபோது திகைத்தார் நண்பர்! கற்பனை உலகுக்கு வேண்டுமானால் -  இது வெறும்  இரைச்சலாகத் தெரியலாம்... ஆனால்  எதார்த்த உலகில் வாழும் நமக்கு -  சுற்றியுள்ள ஒவ்வொரு  சிறு அசைவும் ஓராயிரம் கவிதைகள் சொல்லும் ரகசியம்! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை : புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

7.ஞாயிறு: தனிமையின் இனிமை Sunday:The Symphony of Solitude

 7.ஞாயிறு: தனிமையின் இனிமை Sunday:The Symphony of Solitude  வாரத்தின் இரைச்சல்கள் வடிந்து போன இந்த அமைதிப் பள்ளதாக்கில்... ஸ்பீக்கர் நுனியில்  ராஜா இசைக்க, ராகங்களே இங்கு மௌனத்தின் மொழியாகின்றன! விரல் இடுக்கில் செய்தித்தாள்... உலகத்தின் செய்திகள் ஒருபுறம் இருக்கட்டும், இந்தக் காலைப் பொழுதின் அதிசயத்தைச் சொல்ல அங்கே வார்த்தைகள் ஏது? மறு கையில் கோப்பை நிறைய தேநீர்... ஒவ்வொரு மிடறிலும்  மெல்ல கரைகிறது, நேற்று வரை  சுமந்த மனதின் பாரங்கள்! இசை ஒரு பக்கம்... அறிவு ஒரு பக்கம்... சுவை ஒரு பக்கம்... இன்று நான் மட்டுமே  எனக்குச் சொந்தம்! ****** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

6. பிரிவல்ல... உங்கள் ஆசி! "Your Shadow My Path"

 6. பிரிவல்ல... உங்கள் ஆசி! "Your Shadow My Path" ஊர் எல்லை தாண்டுகையில் -  என்உயிரும் துடிக்கிறதே அப்பா! வாசல் தெளித்த கோலத்திலும் -  நீங்கள்  அமர்ந்த திண்ணை ஓரத்திலும் உங்கள் நிழல் தேடி அலைகின்றேன்! சுவற்றில் தொங்கும் உங்கள் புகைப்படம் - என் இதயத்தில் பாரமாய் இறங்குகிறதே!கண்ணீர் அஞ்சலி என்ற சொல்லே - என்கண்களைக் குளமாக்கிச் சிதைக்கிறதே! உங்கள் விரல் பிடித்து நடந்த மண்ணை - இன்று விட்டுப் பிரிகிறேன் விதியாலே...நீங்கள் ஊரில் இல்லை என்று -  நான் ஊரை விட்டுப் போகவில்லை! எங்கு சென்றாலும் என் கூடவே -  உங்கள்  உயிர் மூச்சும் ஆசியும் வரும் என்பதால்... புன்னகையோடு விடைபெறுகிறேன்! என் பாதைகள் எங்கும் - நீங்கள்  நிழலாய் வருவாய் எனத் தெரியும் அப்பா! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

5.அழைப்பின் அடையாளம் A Ringtone for the Heart

 5.அழைப்பின் அடையாளம் A Heart 💞 of Ringtone  நான் உன்னை  நினைக்கும் பொழுதெல்லாம்... நீயும் என்னை  நினைக்கிறாய் என்பதற்கு  அதுவே சாட்சி! என் மௌனமான  நினைவுகளுக்கு  உயிர் கொடுக்க... சரியான நேரத்தில்  சத்தமிடுகிறது உன் அழைப்பின் ஓசை! திரையில் உன் பெயர்... செவியில் உன் குரல்... நெஞ்சில் உன் நினைவு... ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:  புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

3. காவிரியும்... ஆகாயத்தாமரையும்... Beyond the Barriers

3. காவிரியும்... ஆகாயத்தாமரையும்... Beyond the Barriers பேருந்து ஜன்னலோரம் -  நான் காவிரி ஆற்றின் கரைவழியே பயணிக்கிறேன்! தில்லை நோக்கிச் செல்லும் வழியில் -  அங்கே காவிரித் தாயின்  ஓட்டத்தைக் காண்கிறேன்! துள்ளி வரும் நீரின் வேகத்தை -  அந்த ஆகாயத்தாமரைகள தடுத்து நிறுத்துகின்றன! தடையைத் தாண்டி வழிமாறி ஓடும் -  அந்த நதியின் விடாமுயற்சியை வியந்து பார்க்கிறேன்! சாரல் மழை தந்த குளிர்ச்சியில் -  என் உள்ளம் நனைந்த பயணமிது! தடைகளைத் தாண்டித் தான் -  ஒரு வாழ்வியல் பாடத்தைக் காட்டியது காவிரி! தடைகள் (நீடாமங்கலம் Railway Gate) ஆயிரம் வந்த போதும் -  நம் பயணம் என்றும் தடைபடாது! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:  புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

 2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!) அன்றாட நிகழ்வின்  துளிகள் சேர -  என் அழகிய கவிதைகள்  இங்கே  ஜனனம்! நிறைமதி   அறியா  இரகசியக்  கோப்பாய் -  என் நெஞ்சச் சிறைக்குள்  காதல் கவிதை! மனைவிக்கு  அஞ்சி  மறைத்து வைத்தேன் -  ஒரு மௌனக் காவியம்  சிறையில் தவிக்குது  ரணமாய்!!!! வீட்டு அடுப்பில்  எரியும் விறகிற்குத் துணையாகி போனது என் டைரிக் குறிப்புகள்  அங்கே  மரணம்!! --- ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

 1. எழுத்து எனும் உயிர்  The Soul of Writing சிந்தனைச் சிறகில்  சிதறும் விதைகள் எழுத்து எனும்  நிலத்தில் விழுந்தால் -  அது காவியம்! மனக் குகையில்  மின்னும் வைரங்கள் குறிப்பேட்டில்  பதியாமல் போனால் -  அது காற்றின் ரகசியம்! அலையெனத் தோன்றி  கரையைத் தொடாத எண்ணங்கள் யாவும்  ஏட்டுக்கு வராமல் காற்றில் கரைந்தே போகும்... எழுதுகோல் முனையில்  உயிர் பெறும் வரை ஒவ்வொரு கவிஞனும் -  ஒரு மௌன காவியத்தின்  கல்லறைதான்! --- ஆக்கம் மற்றும் பதிப்புரிமை :  புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார் © 2026.