இடுகைகள்

புன்னகை மன்னன் கவிதைகள் எழுத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

 1. எழுத்து எனும் உயிர்  The Soul of Writing சிந்தனைச் சிறகில்  சிதறும் விதைகள் எழுத்து எனும்  நிலத்தில் விழுந்தால் -  அது காவியம்! மனக் குகையில்  மின்னும் வைரங்கள் குறிப்பேட்டில்  பதியாமல் போனால் -  அது காற்றின் ரகசியம்! அலையெனத் தோன்றி  கரையைத் தொடாத எண்ணங்கள் யாவும்  ஏட்டுக்கு வராமல் காற்றில் கரைந்தே போகும்... எழுதுகோல் முனையில்  உயிர் பெறும் வரை ஒவ்வொரு கவிஞனும் -  ஒரு மௌன காவியத்தின்  கல்லறைதான்! --- ஆக்கம் மற்றும் பதிப்புரிமை :  புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார் © 2026.