37.மௌனமாய் அழும் நினைவுகளின் நிழல் 💔
37.மௌனமாய் அழும் நினைவுகளின் நிழல் 💔 காலை ஆறு நாற்பத்தைந்து... காற்றைக் கிழிக்கும் உங்கள் - அந்தச் ஸ்கூட்டர் சத்தம் எங்கே அப்பா? உங்கள் வருகை சொல்லித் துடிக்கும் அந்த இரும்பு வாயில் (Gate) சத்தம் - இன்று ஏனோ மௌனமாகிக் கிடக்கிறதே! வீட்டின் மூலை முடுக்கெல்லாம் - நீங்கள் "பாப்பா... பாப்பா..." என்று உயிரைக் குழைத்துக் கூப்பிட்ட - அந்த அன்புக் குரல் கேட்கவில்லையே அப்பா! சிகரெட் வாசம் கூடச் சுகமாய் இருந்ததே - இன்று சுவாசத்தில் அந்தச் சுவடும் இல்லையே! உங்கள் குளியலுக்காக அடுப்பில் வெந்நீர் இன்று கொதிக்கவில்லையே! வெளுத்து வாங்கிய உங்கள் வேஷ்டி சட்டைகள் - நம் துணிக்கொடியில் இன்று காயவில்லையே! தலைவாழை இலை அறுக்கவில்லை... தொடுக்கப் பூக்கள் பறிக்கவில்லை... மாங்காயும், பலாக்காயும் - உங்கள் கை தீண்டக் காத்துக் கிடக்கின்றன! தேடிப் பார்க்கிறேன்... ஒவ்வொரு செயலிலும் உங்களைத் தேடித் தோற்றுப் போகிறேன் நான்! காலம் உங்களைக் கொண்டு போனாலும் - என் கண்ணீர்க் கூட்டுக்குள் - நீங்கள் வாழ்ந்து கொண்டே இருப்பாய் அப்பா......😭😭💔 ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன் ...