4.மௌனத்தின் மொழி! A Poem Between Breaths!
4.மௌனத்தின் மொழி! A Poem Between Breaths! காதல் கவிதைகள் எழுத - என் கை விரல்கள் இடற- எழுதாதே என்று சொல்ல - எனது மனது மட்டும் இடம் கொடுக்கவில்லை! மௌனத்தின் மொழி வார்த்தைகள் மௌனத்தில் உறைந்தாலும், சுவாசம் உன்னையே கவிதையாய் சுவாசிக்கிறது; பேனா முனை முடங்கிப் போனாலும், இதயத் துடிப்போ உன் பெயரைத் தான் இடைவிடாமல் எழுதிக் கொண்டிருக்கிறது! சொல்லத் துடிக்கும் காதலுக்கும் - அதைச் சுமக்கத் தெரியாத காகிதத்திற்கும் இடையே, கைவிடப்பட்ட கவிதையாய் - நான் உன் நினைவுகளில் தத்தளிக்கிறேன்! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன் முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026