19.மௌன இடைவெளி.. Beyond the World's, Within Heart's..
19.மௌன இடைவெளி.. Beyond the World's, Within Heart's.. காதல் குறையவில்லை... இருவரிடமும் அன்பு அப்படியேதான் இருக்கிறது! இருந்தும்... பேச வார்த்தைகள் இன்றி மௌனம் ஆளுகிறது, சொல்ல நினைத்தவை எல்லாம் நெஞ்சுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன! உன் மௌனத்திற்குப் பின்னால் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்... என் விலகலுக்குப் பின்னால் உன் நிம்மதி மட்டுமே இருக்கிறது! வெறுப்பினால் வரும் பிரிவை விட, புரிந்துகொண்டு விலகி நிற்கும் இந்த மௌனமே... வலிகள் நிறைந்த பேரன்பு! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன் முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026