இடுகைகள்

#மண்வாசனை #மழைக்கவிதை #கவிதை துளிகள் #மண்மணம் #உணர்வுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

16.மண்வாசனை எனும் மாயம்!!! petrichor!!!

16.மண்வாசனை எனும் மாயம்! petrichor!!! நான் எப்போதும்  வாசனை திரவியத்திற்கு  அடிமை என்றாலும்  இன்று  ஏனோ மறந்து விட்டேன்,  மழையின் மண்வாசத்தினாலா? என்றும்  என் விருப்பமோ... அந்தக் கம்பீரமான  One Man Show   மட்டும் தான்! அலமாரியில் எப்போதும்  அலட்சியமாய் அமர்ந்திருக்கும் மற்ற பாட்டில்களுக்கு நடுவே -  என்னை அடையாளப்படுத்தும்  அந்த ஒரு வாசம்! ஆனால்,  இன்று ஏனோ... கையருகே இருந்தும்  அதைப் பூசிக் கொள்ளவில்லை, நெஞ்சருகே மணம்  இருந்தும் நாடவில்லை! காரணம் என்னவோ? சன்னல் ஓரம்  வழிந்தோடும் மழையா? அல்லது... தகித்த பூமிக்குத் தாகம் தீர்த்து -  மழையின் முத்தத்தால் பிறந்த  அந்த மண்வாசனை யா? ஆணவமான  என்   One Man Show வாசனை கூட -  இன்று வானம் பூசிய  மண்வாசனைக்கு முன்னால் மௌனமாகிப் போனது ஏனோ? இயற்கை தந்துவிட்டுப் போன இந்த ஈரம் - என் செயற்கை  வாசனைத் திரவியத்தை இன்று ஏனோ ஏளனம்  செய்து சிரிக்கிறதே! வானம் தந்த அந்த  வானவில் மணத்திற்கு முன்னால்... யார் செய்த திரவியமும் இன்று தோற்றுத்தான் ப...