46.இயற்கையின் மூவர் அணி: எங்கள் வரலாற்றுத் துறையின் பசுமையான வரவேற்பு.
46.இயற்கையின் மூவர் அணி: எங்கள் வரலாற்றுத் துறையின் பசுமையான வரவேற்பு கல்வி நிலையங்கள் வெறும் அறிவைத் தேடும் இடங்கள் மட்டுமல்ல; இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக்கொடுக்கும் உன்னதக் கூடங்களும் ஆகும். எங்கள் கல்லூரியின் வரலாற்றுத் துறைக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும், ஒரு காலப் பயணத்திற்குள் நுழைவது போன்ற உணர்வைத் தரும். அந்தப் பயணத்தின் நுழைவாயிலில் எங்களை இன்முகத்தோடு வரவேற்க ஒரு பிரம்மாண்டமான 'மூவர் அணி' தினமும் காத்து நிற்கிறது. வரலாற்றுத் துறை கட்டடத்தின் முன்னே, ஆலம் மரம், அரச மரம் மற்றும் வேப்ப மரம் ஆகிய மூன்றும் ஒரே வரிசையில் கம்பீரமாக அணிவகுத்து நிற்பது கண்கொள்ளாக் காட்சியாகும். கல்விக் கோயிலில் ஒரு தினசரி வலம் பொதுவாக, இறைவனின் ஆசியைப் பெறுவதற்காக மக்கள் பக்தி சிரத்தையுடன் கோயில்களில் உள்ள அரச மரத்தைச் சுற்றி வருவது வழக்கம். ஆனால் நாங்களோ, ஆன்மீகக் கோயிலுக்குச் சென்று அரச மரத்தைச் சுற்றுவதை விட, அறிவை வழங்கும் இந்த ' கல்விக் கோயிலில்' இருக்கும் இந்த மரங்களை வாரத்தில் ஐந்து நாட்களும் தவறாமல் சுற்றி வருகிறோம் . இது வெறும் நடைப்பயணம் அல்ல; இயற்கையையும், எங்களுக்கு அ...