41.தொலைந்த சிந்தனையும்... தொடரும் தேடலும்!

 41.தொலைந்த சிந்தனையும்... தொடரும் தேடலும்!

நன்றாகச் சிந்தித்து வைத்த ஒரு அருமையான கவிதை வரிகள் திடீரென மறந்துவிட்டது. "எதை மறந்தோம்?" என்று மூளையைக் கசக்கித் தேடிக்கொண்டிருந்தபோது, சட்டென்று நினைவுக்கு வந்தது 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் வரும் அந்த அழகிய பாடல் வரி...

*"பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே!"*

உண்மைதான்... 
மறந்த சிந்தனையைத் தேடும் 
அந்தத் தவிப்பும் ஒரு கவிதைதான்! 

தேடிவந்த சிந்தனை 
உருவமில்லாக் காற்றைப் போல 
எங்கோ தொலைந்துவிட்டது! 

எதைத் தேடுகிறோம் என்று 
தெரியாமலேயே
அதைத் தேடித் தேடி 
என் மனமும் தொலைகிறதே!

தொலைந்த அந்தச் சிந்தனை 
மீண்டும் 
கிடைக்குமோ கிடைக்காதோ...
ஆனால், 
அந்தத் தேடலின் தவிப்பில்
இப்போது புதிதாய் ஒரு கவிதை பிறந்துவிட்டதே!

***
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை 
புன்னகை மன்னன் 
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!