15.நிஜங்களின் தேடல் Beyond the Masks 🎭
15.நிஜங்களின் தேடல் Beyond the Masks 🎭 விளக்குகள் எரியும் வரை... மேளம் கொட்டும் வரை... சபையோர் கைதட்டும் வரைதான் மன்னன் வேஷமும்... மந்திரி வேஷமும்! தேவை எனும் அரங்கேற்றம் முழுமையாய் முடிந்த பின்னர் - அங்கே பூசிய அரிதாரம் கலைவதும்... போட்ட வேஷங்கள் மறைவதும்... இயல்பு தானே? நாடகம் ஆடியவர்கள் நிஜ மனிதர்களாகத் திரும்புகிறார்கள்! ஆனால்... நாடகத்தை நிஜமென்று நம்பி - அங்கே நகை அணிவித்த நேர்மையாளன் தான் - இன்று நடுத்தெருவில் நிற்கிறான்! வேஷங்களைக் கண்டு வியக்கத் தேவையில்லை... வேஷங்கள் கலைவதைக் கண்டு வருந்தவும் தேவையில்லை! ஏனெனில்... கலைந்த முகங்களில் தான் உண்மையான மனிதர்கள் ஒளிந்திருக்கிறார்கள்! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன் முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026