15.நிஜங்களின் தேடல் Beyond the Masks 🎭

15.நிஜங்களின் தேடல்
Beyond the Masks 🎭

விளக்குகள் எரியும் வரை...
மேளம் கொட்டும் வரை...
சபையோர் கைதட்டும் வரைதான்
மன்னன் வேஷமும்...
மந்திரி வேஷமும்!

தேவை எனும் அரங்கேற்றம்
முழுமையாய் முடிந்த பின்னர் - 
அங்கே
பூசிய அரிதாரம் கலைவதும்...
போட்ட வேஷங்கள் மறைவதும்...
இயல்பு தானே?

நாடகம் ஆடியவர்கள் 
நிஜ மனிதர்களாகத் திரும்புகிறார்கள்!
ஆனால்... 
நாடகத்தை நிஜமென்று நம்பி - அங்கே
நகை அணிவித்த 
நேர்மையாளன் தான் - 
இன்று 
நடுத்தெருவில் நிற்கிறான்!

வேஷங்களைக் கண்டு 
வியக்கத் தேவையில்லை... 
வேஷங்கள் கலைவதைக் கண்டு 
வருந்தவும் தேவையில்லை!

ஏனெனில்...
கலைந்த முகங்களில் தான் 
உண்மையான மனிதர்கள் ஒளிந்திருக்கிறார்கள்!

*****

ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன் 
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!