இடுகைகள்

அக்டோபர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

56. சுழலும் சக்கரம்

56. சுழலும் சக்கரம் வயல் வெளியில்... ஒருபுறம்,  சேற்றைக் கிழித்து  நெல் நடவு செய்கிறார்கள்  நாளை விளையும் நெல்மணிக்காக! வாழ்வைத் தேடி,  வியர்வை சிந்துகின்றனர். மறுபுறம்...  இறந்த  ஒருவரின்  இறுதிச்சடங்கு பணிகள்  நடந்து கொண்டிருக்கின்றன. ஒருபுறம்  சோற்றைக் கொடுக்கும்  விதைப்பு!  மறுபுறம்  அதே  மண்ணில்  சாம்பலாகும் உடல்! வாழ்க்கை  என்பது  இதுதான் போலும்...  சேற்றில் தொடங்கி,  சாம்பலில் முடிகிற  இந்த அழகிய நாடகத்தில்,  ஒருவன்  உயிரைத் தேடி  வியர்க்கிறான்;  மற்றவனோ உயிரைவிட்டு மறைந்திருக்கிறான். இயற்கையின்  இந்த  மௌன நாடகத்தில்,  இறப்பும் பிறப்பும்  கைகோர்த்து நடக்கிறது  இந்த வயல்வெளியில்! தளிகை விடுதி கிராமத்தில் கண்ட நிகழ்வு (30.10.2026) **** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்  முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

55..சாலையில் கண்ட காட்சியும் வைபவ் சுரேஷின் அக்கறையும்.

 55..சாலையில் கண்ட காட்சியும் வைபவ் சுரேஷின் அக்கறையும். காலை நேரத்துப் பொழுதில் பள்ளி வாகனத்திற்காகக் காத்திருக்கும் தருணங்கள் பலவித சிந்தனைகளையும் உரையாடல்களையும் தருவதுண்டு. அப்படித்தான் இன்று (21.10.2026) காலையில். என் மகன் வைபவ்வும் நானும் பள்ளி வாகனத்திற்காகக் காத்திருந்தபோது  சாலையோரத்தில் மது பாட்டில் ஒன்று அடிபட்டுச் சில்லுசில்லாக உடைந்து சிதறிக்கிடப்பதைப் பார்த்த என் மகன் வைபவ், வியப்புடன் என்னிடம், "அப்பா, இதை யார் உடைத்தது?" என்று கேட்டான். அதற்கு நான், "யாரோ மது குடித்துவிட்டுப் பொறுப்பற்ற முறையில் தூக்கி எறிந்து உடைத்துள்ளனர்" என்று விளக்கினேன்.  சாலையில் அந்த ஆபத்தான கண்ணாடித் துண்டுகள் சிதறிக்கிடப்பதைப் பார்த்தவுடன், வைபவ் தன் கவனம் முழுவதையும் என்னிடம் திருப்பி, " அப்பா, பார்த்து வாங்க !" என்று என்னை எச்சரித்து அறிவுறுத்தினான். தன் தந்தைக்கு ஏதேனும் அடிபட்டுவிடக் கூடாது என்ற அவனது அந்தத் தூய்மையான அக்கறை என்னை நெகிழ்ச்சியடையச் செய்தது. அதே நேரத்தில், பொது இடங்களை அசுத்தப்படுத்துபவர்கள் மீதான கோபத்தால், " அப்பா, இப்படிச் சாலையில் பொ...

54. சங்கீதத் தூறல்

 54. சங்கீதத் தூறல் ஞாயிறு காலை...  வள்ளிக்கந்தன் பேருந்து... தில்லை நோக்கி  பயணம்! ஜன்னல் வழியே  சத்தமின்றித்  தொடங்கியது அந்த  இதமான  தூறல் மழை! சரியாக  அந்தத்  தூறல் போடும் பொழுதே, இளையராஜாவின் இசையும்  இணைந்து கொண்டது! " தூறல் போடும் இந்நேரம் .."  எனப் பாடல் ஒலிக்க, வானமும் தன் தூறலைத்  துரிதப்படுத்தியது ! பாடல் வரிகள் அப்படியே  பலித்த மாயம்... பயணத்து ஜன்னலில்  ஒரு கவிதை  ஜனனம்! இசையும் மழையும்  கைகோர்த்த அந்த நொடி, உள்ளம் குளிர்ந்து  இதமானது  என் பயணம்! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை  புன்னகை மன்னன் முனைவர் ரெ.சுரேஷ்குமார்@2026

53. முள்வேலியும் கண்ணீரும்

53. முள்வேலியும் கண்ணீரும் " நோட்டீஸ் ஒட்டக்கூடாது "  என்ற  எச்சரிக்கையை மறைத்துச்  சிரிக்கும்  விளம்பரங்கள்! சுவரைக்  காக்க வந்த  முள்வேலியோ , அதிகாரத்தின்  குறியீடாய்  மிரட்டுகிறது. ஆனால்... கிழிந்தாலும்  பரவாயில்லை  என அந்த  முட்களின்  மீதே  வீழ்ந்து தொங்குகிறது ஒரு  ' கண்ணீர் அஞ்சலி'  பதாகை! **** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை  புன்னகை மன்னன்  முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

52.தோற்பதில் ஒரு சுகம்! (அன்பின் விளையாட்டு)

 52.தோற்பதில் ஒரு சுகம்! (அன்பின் விளையாட்டு) நானும் வைபவும் எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தோம். அப்போது எங்கிருந்தோ இரண்டு சிறிய கற்களை எடுத்துக் கொண்டு ஓடி வந்தான் வைபவ். "அப்பா, உங்களுக்கு ஒண்ணு, எனக்கு ஒண்ணு" என்று என் கையில் ஒரு கல்லைத் திணித்தவன், "இப்போ யாரு இந்தக் கல்லை ரொம்ப தூரமா வீசுறாங்கன்னு பாக்கலாமா? மொதல்ல நீங்க வீசுங்க அப்பா!" என்று ஆர்வமாகக் கூறினான். என் மகனின் அந்தச் சின்ன விளையாட்டில் அவன் சந்தோஷப்படுவதைப் பார்க்க நினைத்தேன். நான் தோற்று, அவனை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், என் கையில் இருந்த கல்லை அதிக தூரம் வீசாமல் என் அருகிலேயே விழும்படி மெதுவாக வீசினேன். இப்போது வைபவ்வின் முறை. அவன் கல்லை எப்படி தூக்கி எறியப் போகிறான் என்று நான் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவன் செய்ததோ வேறு! என்னை மாதிரியே அவனும் அந்தச் சிறிய கல்லை அதிக தூரம் வீசாமல் அவனுக்குப் பக்கத்திலேயே போட்டான்.  கல் கீழே விழுந்ததும், "அப்பா... நீங்கதான் ஜெயிச்சிட்டீங்க!" என்று துள்ளிக் குதித்துக் கொண்டாடினான் என் வைபவ். நான் அவனுக்காகத் தோற்க நின...