54. சங்கீதத் தூறல்

 54. சங்கீதத் தூறல்

ஞாயிறு காலை... 
வள்ளிக்கந்தன் பேருந்து...
தில்லை நோக்கி 
பயணம்!
ஜன்னல் வழியே 
சத்தமின்றித் 
தொடங்கியது
அந்த 
இதமான 
தூறல் மழை!

சரியாக 
அந்தத் 
தூறல் போடும் பொழுதே,
இளையராஜாவின் இசையும் 
இணைந்து கொண்டது!
"தூறல் போடும் இந்நேரம்.." 
எனப் பாடல் ஒலிக்க,
வானமும் தன் தூறலைத் 
துரிதப்படுத்தியது!

பாடல் வரிகள் அப்படியே 
பலித்த மாயம்...
பயணத்து ஜன்னலில் 
ஒரு கவிதை 
ஜனனம்!
இசையும் மழையும் 
கைகோர்த்த அந்த நொடி,
உள்ளம் குளிர்ந்து 
இதமானது 
என் பயணம்!

*****

ஆக்கம் மற்றும் பதிப்புரிமை 
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்@2026

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!