இடுகைகள்

#தமிழ் கவிதைகள் #தமிழ் வரிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

11. இசை‌ விருந்து! The Melodic Feast!

 11. இசை‌ விருந்து!       The Melodic Feast! இன்று இரவு - என் பசிக்காக நான் உணவு  ஏதும் உண்ணவில்லை!  வெறும் சோறு -  இந்தப் பித்துப் பிடித்த  மனதின் பசியைத் தீர்க்கவில்லை!! காற்றோடு மிதந்து  வந்த இசையையே -  அமுதமாக அருந்தினேன் இன்று!!! பாடல்கள் தந்த விருந்து; வயிறு நிறையவில்லை -  ஆனால் மனது நிறைந்து போனது!!!! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026