2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

 2. கவிதைகளின் மூன்று திசைகள்!!!

(The Three Dimensions of Poetry!!!)

அன்றாட நிகழ்வின் 
துளிகள் சேர - 
என்
அழகிய கவிதைகள் 
இங்கே 
ஜனனம்!

நிறைமதி 
அறியா 
இரகசியக் 
கோப்பாய் - 
என்
நெஞ்சச் சிறைக்குள் 
காதல் கவிதை!
மனைவிக்கு 
அஞ்சி 
மறைத்து வைத்தேன் - 
ஒரு
மௌனக் காவியம் 
சிறையில்
தவிக்குது 
ரணமாய்!!!!

வீட்டு
அடுப்பில் 
எரியும் விறகிற்குத்
துணையாகி
போனது
என்
டைரிக் குறிப்புகள் 
அங்கே 
மரணம்!!

---

ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன் 
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!