56. சுழலும் சக்கரம்
56. சுழலும் சக்கரம்
வயல் வெளியில்...
ஒருபுறம்,
சேற்றைக் கிழித்து
நெல் நடவு செய்கிறார்கள்
நாளை விளையும் நெல்மணிக்காக!
வாழ்வைத் தேடி,
வியர்வை சிந்துகின்றனர்.
மறுபுறம்...
இறந்த
ஒருவரின்
இறுதிச்சடங்கு பணிகள்
நடந்து கொண்டிருக்கின்றன.
ஒருபுறம்
சோற்றைக் கொடுக்கும்
விதைப்பு!
மறுபுறம்
அதே
மண்ணில்
சாம்பலாகும் உடல்!
வாழ்க்கை
என்பது
இதுதான் போலும்...
சேற்றில் தொடங்கி,
சாம்பலில் முடிகிற
இந்த அழகிய நாடகத்தில்,
ஒருவன்
உயிரைத் தேடி
வியர்க்கிறான்;
மற்றவனோ உயிரைவிட்டு மறைந்திருக்கிறான்.
இயற்கையின்
இந்த
மௌன நாடகத்தில்,
இறப்பும் பிறப்பும்
கைகோர்த்து நடக்கிறது
இந்த வயல்வெளியில்!
தளிகை விடுதி கிராமத்தில் கண்ட நிகழ்வு (30.10.2026)
****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026
கருத்துகள்
கருத்துரையிடுக