44.தேர்வு அறையில் அம்மா

44.தேர்வு அறையில் அம்மா

கல்லூரி வளாகத்தில்
தேர்வு எழுதும் அம்மா...

கையில் பேனா,
முன்னால் வினாத்தாள்;
ஆனால்,
மனம் முழுவதும்
அருகில் விளையாடும்
குழந்தையிடமே.

திடீரென
குழந்தை அழும் சத்தம்...

எந்த வினாவும்
நினைவில் நிற்கவில்லை;
எந்த விடையும்
மனதில் தோன்றவில்லை.

பதற்றத்தோடு
இருக்கையை விட்டு எழுந்து,
தாய்மையை மட்டும்
தழுவிக்கொண்டு
குழந்தையைத் தேடி ஓடினாள்.

அவளுக்குத்
தேர்வை விட பெரியது
ஒரே ஒரு பொறுப்பு...

"அம்மா" என்ற
ஆயுள் முழுதும் தொடரும் தேர்வு!


*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை 
புன்னகை மன்னன் 
முனைவர் ரெ.சுரேஷ்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!