4.மௌனத்தின் மொழி! A Poem Between Breaths!
4.மௌனத்தின் மொழி!
A Poem Between Breaths!
காதல் கவிதைகள்
எழுத -
என்
கை விரல்கள் இடற-
எழுதாதே என்று சொல்ல -
எனது
மனது மட்டும்
இடம் கொடுக்கவில்லை!
மௌனத்தின் மொழி வார்த்தைகள் மௌனத்தில் உறைந்தாலும்,
சுவாசம் உன்னையே கவிதையாய் சுவாசிக்கிறது;
பேனா முனை முடங்கிப் போனாலும்,
இதயத் துடிப்போ
உன் பெயரைத் தான்
இடைவிடாமல்
எழுதிக் கொண்டிருக்கிறது!
சொல்லத் துடிக்கும் காதலுக்கும் -
அதைச்
சுமக்கத் தெரியாத காகிதத்திற்கும்
இடையே,
கைவிடப்பட்ட கவிதையாய் -
நான்
உன் நினைவுகளில் தத்தளிக்கிறேன்!
*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026
கருத்துகள்
கருத்துரையிடுக