37.மௌனமாய் அழும் நினைவுகளின் நிழல் 💔
37.மௌனமாய் அழும் நினைவுகளின் நிழல் 💔
காலை ஆறு நாற்பத்தைந்து...
காற்றைக் கிழிக்கும் உங்கள் - அந்தச்
ஸ்கூட்டர் சத்தம் எங்கே அப்பா?
உங்கள் வருகை சொல்லித் துடிக்கும்
அந்த இரும்பு வாயில் (Gate) சத்தம் - இன்று
ஏனோ மௌனமாகிக் கிடக்கிறதே!
வீட்டின் மூலை முடுக்கெல்லாம் - நீங்கள்
"பாப்பா... பாப்பா..." என்று
உயிரைக் குழைத்துக் கூப்பிட்ட - அந்த
அன்புக் குரல் கேட்கவில்லையே அப்பா!
சிகரெட் வாசம் கூடச் சுகமாய் இருந்ததே - இன்று
சுவாசத்தில் அந்தச் சுவடும் இல்லையே!
உங்கள் குளியலுக்காக அடுப்பில்
வெந்நீர் இன்று கொதிக்கவில்லையே!
வெளுத்து வாங்கிய உங்கள் வேஷ்டி சட்டைகள் - நம்
துணிக்கொடியில் இன்று காயவில்லையே!
தலைவாழை இலை அறுக்கவில்லை...
தொடுக்கப் பூக்கள் பறிக்கவில்லை...
மாங்காயும், பலாக்காயும் - உங்கள்
கை தீண்டக் காத்துக் கிடக்கின்றன!
தேடிப் பார்க்கிறேன்...
ஒவ்வொரு செயலிலும் உங்களைத் தேடித்
தோற்றுப் போகிறேன் நான்!
காலம் உங்களைக் கொண்டு போனாலும் - என்
கண்ணீர்க் கூட்டுக்குள் - நீங்கள்
வாழ்ந்து கொண்டே இருப்பாய் அப்பா......😭😭💔
*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026
கருத்துகள்
கருத்துரையிடுக