32.விண்ணைத் தொடும் கனவு!
32.விண்ணைத் தொடும் கனவு!
வாசல் வரை வந்தது பயிற்சி விமானம்,
மகன் வைபவிடம் காட்டினேன் அந்த ஆகாய விந்தையை!
பக்கத்தில் நின்றவள் கிண்டல் செய்தாள்...
"நண்பர்கள் விண்ணில் பறக்க,
நீங்கள் மண்ணில் பார்க்கிறீர்களே"
என!
சிரித்தபடி சொன்னேன் அவளிடம்:
"காலத்தின் சக்கரம் சுழலும் ஒருநாள்!
இன்று பறப்பவர்கள் கீழே இறங்கும் வேளை,
நான் சிகரம் நோக்கி விமானம் ஏறுவேன்!"
கனவுகள் பெரியது, காலமும் கனியும்...
என் சிறகுகள் விரியும் நாள் வெகுதொலைவில் இல்லை!
---
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026
கருத்துகள்
கருத்துரையிடுக