30.மக்களின் தீர்ப்பு: பரபரப்பான 5 நாட்கள்*!
30.மக்களின் தீர்ப்பு:
பரபரப்பான 5 நாட்கள்*!
மே 4-ம் தேதி காலை 8மணிக்கு..
தொடக்கப் புள்ளியாய் ஒரு
*Breaking News*!
யார் ஆள்வார்?
யார் வீழ்வார்?
தமிழ் நாடே எதிர்பார்த்த
அந்த நொடிகள்!
ஐந்து நாட்கள்..
ஓயாத விவாதங்கள்,
தூக்கம் தொலைத்த எதிர்பார்ப்புகள்,
மாறி மாறி வந்த
திருப்பங்கள் -
என
நிமிடத்திற்கு நிமிடம்
அதிர வைத்தது
*Breaking News*!
மே 9-ம் தேதி மாலை 4:30 மணி..
முடிவுக்கு வந்தது...!
ஊகங்கள் முடிந்து..
முற்றுப்புள்ளி வைத்தது
அந்த
*Breaking News*!
தோற்றவர் பாடம் கற்க..
வென்றவர் பணி செய்ய..
ஜனநாயகத் திருவிழாவின்
ஒரு அத்தியாயம் -
இன்றுடன்
நிறைவு பெற்றது!
*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
*புன்னகை மன்னன்*
முனைவர் ரெ.சுரேஷ்குமார்
கருத்துகள்
கருத்துரையிடுக