36. ஆலத்தூர் கால்பந்தாட்ட மைதானத்து : நினைவலைகள்
36. ஆலத்தூர் கால்பந்தாட்ட மைதானத்து : நினைவலைகள்
காலங்கள் ஓடினாலும்
கருத்தில் நின்ற சில நினைவுகள்...
புத்தாடை மணம் வீச -
அன்று
பள்ளிக்கூடம் திறந்த
பள்ளிக்கூடம் திறந்த
அந்த முதல் நாள்!
ஊரே திரண்டு நின்று
உற்சாகம் பொங்கி வழிய -
ஊரே திரண்டு நின்று
உற்சாகம் பொங்கி வழிய -
எங்கள்
ஆலத்தூர் கால்பந்தாட்ட விழா!
பாடப் புத்தகங்கள் கற்றுத்தந்ததை விட
பள்ளிக்கூடம் திறந்த அந்த நாளை -
ஆலத்தூர் கால்பந்தாட்ட விழா!
பாடப் புத்தகங்கள் கற்றுத்தந்ததை விட
பள்ளிக்கூடம் திறந்த அந்த நாளை -
நான்
இன்றும் உயிர்ப்புடன் சுமக்கிறேன்!
மைதானத்தின் புழுதி கற்றுத்தந்ததை விட
ஆலத்தூர் கால்பந்து வீரர்களை -
இன்றும் உயிர்ப்புடன் சுமக்கிறேன்!
மைதானத்தின் புழுதி கற்றுத்தந்ததை விட
ஆலத்தூர் கால்பந்து வீரர்களை -
நான்
இன்றும் வியப்புடன் நினைக்கிறேன்!
பள்ளி மணி அடித்தாலும் -
இன்றும் வியப்புடன் நினைக்கிறேன்!
பள்ளி மணி அடித்தாலும் -
அன்று
பறந்தோடி வீட்டுக்குச் செல்லாமல்,
கால்பந்துப் போட்டி ரசிப்பதற்கே -
பறந்தோடி வீட்டுக்குச் செல்லாமல்,
கால்பந்துப் போட்டி ரசிப்பதற்கே -
நாங்களாய்
முண்டியடித்து இடம் பிடித்த
முண்டியடித்து இடம் பிடித்த
காலமும் உண்டு!
மாம்பழமும், இலந்தைப்பழமும்,
நாவல் பழமும் ரசித்து உண்டு,
நெட்டிலிங்க மரக் காய்களை அடித்து
விளையாடித் தீர்த்த அந்தக்காலம் - கனாக்காலம்!
எதிரணியினர் காலில் ஷூ கட்டி வந்தாலும்,
மன தைரியத்தையே கவசமாய் அணிந்து,
காலில் ஏதுமில்லாமல் களம் கண்ட
*எட்டுப்புளிக்காடு வீரர்கள் என்றும் மறக்க முடியாதவர்கள்*!
மைதானத்து கல் முற்கள் குத்தினாலும்
கவலைப்படாமல் பாய்ந்த அந்த சிங்கங்கள்,
வெறும் கால்களால் அல்ல - தங்கள்
பெரு வீரத்தால் பந்துகளை உதைத்தவர்கள்!
மறக்க நினைத்தாலும்
மறக்க முடியாதவை சில...
மாம்பழமும், இலந்தைப்பழமும்,
நாவல் பழமும் ரசித்து உண்டு,
நெட்டிலிங்க மரக் காய்களை அடித்து
விளையாடித் தீர்த்த அந்தக்காலம் - கனாக்காலம்!
எதிரணியினர் காலில் ஷூ கட்டி வந்தாலும்,
மன தைரியத்தையே கவசமாய் அணிந்து,
காலில் ஏதுமில்லாமல் களம் கண்ட
*எட்டுப்புளிக்காடு வீரர்கள் என்றும் மறக்க முடியாதவர்கள்*!
மைதானத்து கல் முற்கள் குத்தினாலும்
கவலைப்படாமல் பாய்ந்த அந்த சிங்கங்கள்,
வெறும் கால்களால் அல்ல - தங்கள்
பெரு வீரத்தால் பந்துகளை உதைத்தவர்கள்!
மறக்க நினைத்தாலும்
மறக்க முடியாதவை சில...
*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026
கருத்துகள்
கருத்துரையிடுக