28. அய்யனார் வீரனார் கோவில் திருவிழாவும்: அப்பா தந்த அந்த முப்பது ரூபாயும். The Kingdom of Thirty Rupees: Childhood Festival Memories

 28. அய்யனார் வீரனார் கோவில் திருவிழாவும்: அப்பா தந்த அந்த முப்பது ரூபாயும்.
The Kingdom of Thirty Rupees: Childhood Festival Memories


சித்திரை முழு நிலவு ஒளியூட்ட...
அய்யனார்,வீரனார் கோவில் திருவிழாவை நோக்கி - 
அன்று
அண்ணன்களோடும், நண்பர்களோடும்
ஆயிரம் கதைகள் பேசி...
கால் வலிக்க நடந்த அந்தப் பயணம் - 
இன்றும்
கண்ணுக்குள்ளே நிற்கிறதே பசுமையாக!

மூன்று நாள் திருவிழாவிற்கு - 
ஒரு நாளுக்கு
பத்து ரூபாய் வீதம் 
அப்பா தந்த அந்த 
முப்பது ரூபாய்,
அகிலத்தையே 
ஆளும் அதிகாரத்தைத் தந்தது!

ஐஸ்,பொறி, பலுன், ராட்டினம் என - 
அன்று
மகிழ்ச்சியில் திளைத்த 
அந்த மழலை மனம்...
இன்று...
சொந்த வாகனத்தில் குடும்பத்தோடு சென்றாலும்,
அந்தக் கால்நடைப் பயணத்தில் 
கிடைத்த
குழந்தைப் பருவ 
ஆனந்தத்தைத் தேடுகிறது!

*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன் 
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!