3. காவிரியும்... ஆகாயத்தாமரையும்... Beyond the Barriers

3. காவிரியும்... ஆகாயத்தாமரையும்...
Beyond the Barriers

பேருந்து ஜன்னலோரம் - 
நான்
காவிரி ஆற்றின் கரைவழியே பயணிக்கிறேன்!
தில்லை நோக்கிச் செல்லும் வழியில் - 
அங்கே

காவிரித் தாயின் 
ஓட்டத்தைக் காண்கிறேன்!
துள்ளி வரும் நீரின் வேகத்தை - 
அந்த
ஆகாயத்தாமரைகள தடுத்து நிறுத்துகின்றன!
தடையைத் தாண்டி வழிமாறி ஓடும் - 
அந்த
நதியின் விடாமுயற்சியை வியந்து பார்க்கிறேன்!

சாரல் மழை தந்த குளிர்ச்சியில் - 
என்
உள்ளம் நனைந்த பயணமிது!
தடைகளைத் தாண்டித் தான் - 
ஒரு
வாழ்வியல் பாடத்தைக் காட்டியது காவிரி!
தடைகள் (நீடாமங்கலம் Railway Gate) ஆயிரம் வந்த போதும் - 
நம்
பயணம் என்றும் தடைபடாது!

*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: 
புன்னகை மன்னன் 
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!