8. சத்தங்களின் அடையாளம்! Echoes of Reality
8. சத்தங்களின் அடையாளம்
Echoes of Reality
வாழ்க்கைப் பயணத்தின் சந்தடியில் - நாம்எத்தனையோ சத்தங்களைக் கடந்து போகிறோம்!
காற்றோடு கரையும் பல ஓசைகளில் - சிலகாலம் கடந்தும் இதயத்தில் தங்கி விடுகின்றன!
இன்று காலை
நண்பனிடம் போனில் பேசும் போது
நடுவே புகுந்தது
அந்தப் பேருந்தின் 'ஹார்ன்' சத்தம்!
"அது NS விஜய் தானே?" என்று -
நான்அடுத்த நொடியே கேட்டபோது திகைத்தார் நண்பர்!
கற்பனை உலகுக்கு வேண்டுமானால் -
இது வெறும்
இரைச்சலாகத் தெரியலாம்...
ஆனால்
எதார்த்த உலகில் வாழும் நமக்கு -
சுற்றியுள்ள ஒவ்வொரு
சிறு அசைவும்
ஓராயிரம் கவிதைகள் சொல்லும் ரகசியம்!
*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை :
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026
கருத்துகள்
கருத்துரையிடுக