7.ஞாயிறு: தனிமையின் இனிமை Sunday:The Symphony of Solitude

 7.ஞாயிறு: தனிமையின் இனிமை
Sunday:The Symphony of Solitude 

வாரத்தின் இரைச்சல்கள் வடிந்து போன
இந்த அமைதிப் பள்ளதாக்கில்...
ஸ்பீக்கர் நுனியில் 
ராஜா இசைக்க,
ராகங்களே இங்கு மௌனத்தின்
மொழியாகின்றன!

விரல் இடுக்கில் செய்தித்தாள்...
உலகத்தின் செய்திகள் ஒருபுறம் இருக்கட்டும்,
இந்தக் காலைப் பொழுதின்
அதிசயத்தைச் சொல்ல அங்கே வார்த்தைகள் ஏது?

மறு கையில் கோப்பை நிறைய தேநீர்...
ஒவ்வொரு மிடறிலும் 
மெல்ல கரைகிறது,
நேற்று வரை 
சுமந்த மனதின் பாரங்கள்!

இசை ஒரு பக்கம்...
அறிவு ஒரு பக்கம்...
சுவை ஒரு பக்கம்...
இன்று நான் மட்டுமே 
எனக்குச் சொந்தம்!

******
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன் 
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!