10.சொல்லாதச் சொல்! The Tug of War!

 10.சொல்லாதச் சொல்!
The Tug of War!

“சொல்லிவிடு” - 
என்று 
துடியாய்த் துடித்து 
இதயம் 
என்னைத் தூண்டுகிறது!

“சொல்லாதே” - 
என்று 
விளைவுகளை எண்ணி 
உள்ளம் என்னைத் தடுக்கிறது!

சொல்லிவிட்டால்... 
என் பாரம் குறையலாம்!
சொல்லாமல் போனால்... 
உன் நட்பு நிலைக்கலாம்!

சொல்லவா? வேண்டாமா? 
வெல்லப் போவது 
இதயத்தின் ஆசையா? 
இல்லை... 
உள்ளத்தின் எச்சரிக்கையா?

இருதலைக் கொள்ளி எறும்பாய் நான்...
சொல்லத் துடிக்கும் வார்த்தைகளை மௌனத்தால் மூடி வைத்து - 
உன் முன்னால் 
ஊமையாய் நிற்கிறேன்!

*****

ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன் 
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!