13.வண்ணங்களின் சங்கமம் The Secret Treaty of Colours.
13.வண்ணங்களின் சங்கமம்
The Secret Treaty of Colours.
நீ உடுத்தும்
ஆடை வண்ணத்தில் -
அன்று
நானும் உடுத்தினேன்
அதே வண்ணத்தில்!
யாரும் அறியா
ஒரு ரகசிய ஒப்பந்தம்!
உலகிற்கு அது -
வெறும்
ஒரே நிறத்து ஆடைகள்!
உனக்கும் எனக்கும்
மட்டுமே தெரியும் -
அது
ஒரே திசையில்
துடிக்கும்
இதயங்களின் அடையாளம்!
நீலமோ,
சிவப்போ அல்லது
தூய வெள்ளையோ...
வண்ணங்கள்
எதுவாக இருந்தாலும் -
அங்கே
வெளிப்பட்டது
என்னவோ
நம் காதலின்
ஒரே வண்ணம் தான்!
*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026
கருத்துகள்
கருத்துரையிடுக