இடுகைகள்

27.பயணத்தின் துணைவி The Soul's of Co - Passanger

 27.பயணத்தின் துணைவி The Soul's of Co - Passanger  பேருந்து பயணத்தை  எப்போதும் ரசிக்கிறேன்... அது என்னை ஓரிடத்திலிருந்து  வேறொரு இடத்திற்கு  அழைத்துச் செல்வதால் அல்ல! அதில் நான்... உன்னைப் பற்றியே  அதிகமாய்  நினைக்க முடிவதால்! வேகமாய் மறையும்  மரங்களுக்கு இடையே... வெகு தூரம் ஓடி வரும்  மேகங்களுக்கு இடையே... நீயும் என்னுடன்  சேர்ந்து பயணிப்பதாக  உணர்கிறேன்! ஜன்னல் ஓரம்  வீசும் காற்றில்... உன் சுவாசத்தின்  ஈரம் கலந்தே இருக்கிறது! பயணம் முடியலாம்... ஆனால், உன்னுடன் நான்  நடத்தும் இந்த  மனப்பயணம்... எப்போதும் முடிவதில்லை! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

26. அன்புப் பயணம் A Journey of Love

26. அன்புப் பயணம் A Journey of Love  புதுப்பட்டி புளிய மரச் சாலை  நிழலில், என் குடும்பத்தோடு தொடருது  இந்த அழகிய பயணம்! பிள்ளைகளின் சிணுங்கல்களும்,  சின்னச் சின்னச் சண்டைகளும்  கலந்த இந்தப் பயணமே  வாழ்வின் ஆகச்சிறந்த வரம்." வெள்ளைச் சட்டையில்  வைணவியின் உதட்டுச் சாயம் -  என் முதுகில் பதிந்த  ஒரு பாச முத்திரை! வைபவ் பசி என்கிறான்... நிறைமதி வண்டியில்  உட்கார இடமில்லை என்கிறாள்... நெரிசலிலும் நெஞ்செங்கும்  அன்பு பொங்கி வழிகிறது! **** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்  முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

25.காலம் கடந்த இணைப்பயணம்!!! Through Your Eyes,Once More!!!

 25.காலம் கடந்த இணைப்பயணம்!!! Through Your Eyes,Once More!!!🕌 நான் கடந்த அதே பாதையில் -  இன்று நீயும் பயணம் செய்கிறாய்! "நேற்று நான்...  இன்று நீ..."  என  இந்தச் சாலைகள் ரகசியம் பேசுகின்றன! உடல் அளவில் இன்று நான் உன்னுடன் அங்கில்லை தான்... இருந்தும் என்ன? உன் ஒவ்வொரு மூச்சிலும் என் நினைவிருப்பதால் நானும் உன்னோடு இருப்பதாகவே உணர்கிறேன்! ஈரப்பதமான அந்த நினைவுகளின் வழியே... இருபது ஆண்டுகளுக்கு முன்பு -  அன்று 2003-இல் நான் ரசித்த அந்த தாஜ்மஹால்! அதே வழித்தடத்தில் நீயும்  இன்று  அதைப் பார்க்கிறாய் என்பதால்... என் கண்கள் அன்று கண்ட அந்த அழகு, இருபது ஆண்டுகள் கடந்து -  இன்று  உன் கண்கள் வழியே மீண்டும் உயிர்பெறுகிறது! உலகிற்கு அது ஏழாவது அதிசயமாக இருக்கலாம்... ஆனால்,  நாம் சேராமலே -  என் வழித்தடத்தில்  நீயும் பயணித்து  அந்த அழகைப் பருகுவது, என் மனதிற்கு  நீ தரும் எட்டாவது அதிசயம்! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

24.அனைத்து கட்சிகளும் சங்கமம் The Laundry Coalition

 24.அனைத்து கட்சிகளும் சங்கமம் The Laundry Coalition  வெள்ளை வேட்டி முதல்  வண்ணத் துண்டுகள் வரை,  கறை படிந்த சட்டைகள் இங்கே  ஒரே வாளியில் கூட்டணி! அரசியல் மேடையில்  ஆளுக்கொரு திசை - ஆனால்,  சலவைக்கடைத் தொட்டியில்  அனைத்துக் கட்சிகளும் சங்கமம்! வலதுசாரிச் சட்டையும்  இடதுசாரி வேட்டியும்,  ஒரே கொடியில் ஒற்றுமை...  சலவைக்காரனின் சமரசப் பார்வையில்! பிரித்துப் பார்க்கும்  சாதி, மதம், கட்சி - என  எல்லாக் கறைகளையும் நீக்கி,  புதுப்பொலிவு தருகிறது சோப்பு நுரை! தேய்த்தால் மடிந்துதான் ஆகவேண்டும்  இரும்புப் பெட்டியின் சூட்டிற்கு...  நாளை மீண்டும்  புத்தம் புதிய மனிதர்களாகப் புறப்பட! நேற்று மிகப்பெரிய சலவை நிலையத்தில் நான் கண்ட காட்சிகள். ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

23.விரலில் மை... மனதில் ஒருவித வலி! Ink on Finger, Ache in Heart"

23.விரலில் மை... மனதில் ஒருவித வலி! Ink on Finger, Ache in Heart" அன்று - பாடப்புத்தக சுமையோடு பதறி ஓடித்திரிந்த அதே பள்ளிக்கூடம்... இன்று - தேசத்தின் தலைவிதி எழுதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டு வளாகம்! ஒரு விரல் மையால் நாட்டின்  திசையைத் தீர்மானிக்க வரிசையில் நிற்கிறேன்... மனமோ - காலம் தின்ற என் பால்யத்தைத் தேடி பின்னோக்கி ஓடுகிறது! எங்களுக்கு அரணாக நின்ற  அந்தப் பெரிய மாமரமும்... நிழல் போர்த்திய பாதம் மரமும்... அவற்றின் இடுக்கில்  எங்களோடு பயின்ற  அந்தச்  சிறு கட்டெறும்புகளும் எங்கே? மரங்கள் இழந்த நிலத்தில்  இன்று வகுப்பறைகள் மட்டும் பெருகிக் கிடக்கின்றன... வெற்றுச் சுவர்கள் பெருகியது போல் - ஒவ்வொரு ஆண்டும் மாணாக்கர்களும்  பெருக வேண்டும் என்ற ஏக்கத்தோடு  என் வாக்கைச் செலுத்தினேன்! என் காலத்து நினைவுகளோடும், வருங்காலத்து எதிர்பார்ப்போடும்! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

22.நதியாய் ஓடும் வாழ்க்கை The Beauty in the Journey

22.நதியாய் ஓடும் வாழ்க்கை  The Beauty in the Journey  வாழ்க்கை ஒரு நதி,  ஓடிக்கொண்டே இருக்கிறது, கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்காமல், சேரும் இடத்தை அறியாமல், ஆனால் அதன் அழகு, அதன் பயணத்திலே தான். ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன் முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்! நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி கைலாசநாதரையும், வீரனாரையும் தரிசித்துவிட்டுத் திரும்பிய வேளையில், என் மகன் வைபவ் கேட்ட ஒரு கேள்வி என்னை வியப்பில் ஆழ்த்தியது. "அப்பா, ஒரு இலை பறித்து கொடுங்கள்" என்றான் வைபவ் சுரேஷ் (UKG). ஒரு சிறுவன் விளையாடவோ அல்லது கையில் வைத்துப் பிய்க்கவோதான் இலை கேட்பான் என்று நினைத்து, "எதற்கு வைபவ்?" என்று கேட்டேன். அவன் சற்றும் யோசிக்காமல் சொன்ன பதில்: "அப்பா, அந்த இலையை வைத்து நான் ஒரு Experiment செய்யப் போகிறேன்!" என்றான்!!! அவன் நாவில் இருந்து வெளிப்பட்ட அந்த ஆங்கில வார்த்தை என்னை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. தெய்வத் தரிசனம் முடித்து வரும் வேளையில், ஒரு சிறுவனுக்குள் துளிர்விட்டிருக்கும் இந்தத் தேடல், அவன் வளரும் காலத்தின் வேகத்தையும் அறிவையும் எனக்குப் புரிய வைத்தது. வைபவ் அந்த வார்த்தையைச் சொன்ன மாத்திரத்தில், என் மனம் கால இயந்திரத்தில் ஏறி பத்தாம் வகுப்பு வகுப்பறைக்குச் சென்றது. எங்களுக்குப் பாடம் எடுத்த புலவஞ்சி C.R. Sir அவர்கள் கண் முன்னே வந்து நின்றார். அவர் அன்று எங்களுக...