24.அனைத்து கட்சிகளும் சங்கமம் The Laundry Coalition

 24.அனைத்து கட்சிகளும் சங்கமம்
The Laundry Coalition 

வெள்ளை வேட்டி முதல் 
வண்ணத் துண்டுகள் வரை, 
கறை படிந்த சட்டைகள் இங்கே 
ஒரே வாளியில் கூட்டணி!

அரசியல் மேடையில் 
ஆளுக்கொரு திசை - ஆனால், 
சலவைக்கடைத் தொட்டியில் 
அனைத்துக் கட்சிகளும் சங்கமம்!

வலதுசாரிச் சட்டையும் 
இடதுசாரி வேட்டியும், 
ஒரே கொடியில் ஒற்றுமை... 
சலவைக்காரனின் சமரசப் பார்வையில்!

பிரித்துப் பார்க்கும் 
சாதி, மதம், கட்சி - என 
எல்லாக் கறைகளையும் நீக்கி, 
புதுப்பொலிவு தருகிறது சோப்பு நுரை!

தேய்த்தால் மடிந்துதான் ஆகவேண்டும் 
இரும்புப் பெட்டியின் சூட்டிற்கு... 
நாளை மீண்டும் 
புத்தம் புதிய மனிதர்களாகப் புறப்பட!


நேற்று மிகப்பெரிய சலவை நிலையத்தில் நான் கண்ட காட்சிகள்.
*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன் 
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!