26. அன்புப் பயணம் A Journey of Love
26. அன்புப் பயணம்
A Journey of Love
புதுப்பட்டி புளிய மரச் சாலை
நிழலில்,
என் குடும்பத்தோடு தொடருது
இந்த அழகிய பயணம்!
பிள்ளைகளின் சிணுங்கல்களும்,
சின்னச் சின்னச் சண்டைகளும்
கலந்த இந்தப் பயணமே
வாழ்வின் ஆகச்சிறந்த வரம்."
வெள்ளைச் சட்டையில்
வைணவியின் உதட்டுச் சாயம் -
என்
முதுகில் பதிந்த
ஒரு பாச முத்திரை!
வைபவ் பசி என்கிறான்...
நிறைமதி வண்டியில்
உட்கார இடமில்லை என்கிறாள்...
நெரிசலிலும் நெஞ்செங்கும்
அன்பு பொங்கி வழிகிறது!
****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026
கருத்துகள்
கருத்துரையிடுக