25.காலம் கடந்த இணைப்பயணம்!!! Through Your Eyes,Once More!!!
25.காலம் கடந்த இணைப்பயணம்!!!
Through Your Eyes,Once More!!!🕌
நான் கடந்த அதே பாதையில் -
இன்று
நீயும் பயணம் செய்கிறாய்!
"நேற்று நான்...
இன்று நீ..."
என
இந்தச் சாலைகள் ரகசியம் பேசுகின்றன!
உடல் அளவில் இன்று நான்
உன்னுடன் அங்கில்லை தான்...
இருந்தும் என்ன?
உன் ஒவ்வொரு மூச்சிலும் என் நினைவிருப்பதால்
நானும் உன்னோடு இருப்பதாகவே உணர்கிறேன்!
ஈரப்பதமான அந்த நினைவுகளின் வழியே...
இருபது ஆண்டுகளுக்கு முன்பு -
அன்று
2003-இல் நான் ரசித்த அந்த தாஜ்மஹால்!
அதே வழித்தடத்தில் நீயும்
இன்று
அதைப் பார்க்கிறாய் என்பதால்...
என் கண்கள் அன்று கண்ட அந்த அழகு,
இருபது ஆண்டுகள் கடந்து -
இன்று
உன் கண்கள் வழியே மீண்டும் உயிர்பெறுகிறது!
உலகிற்கு அது ஏழாவது அதிசயமாக இருக்கலாம்...
ஆனால்,
நாம் சேராமலே -
என் வழித்தடத்தில்
நீயும் பயணித்து
அந்த அழகைப் பருகுவது,
என் மனதிற்கு
நீ தரும் எட்டாவது அதிசயம்!
*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026
கருத்துகள்
கருத்துரையிடுக