27.பயணத்தின் துணைவி The Soul's of Co - Passanger

 27.பயணத்தின் துணைவி
The Soul's of Co - Passanger 

பேருந்து பயணத்தை 
எப்போதும் ரசிக்கிறேன்...
அது என்னை ஓரிடத்திலிருந்து 
வேறொரு இடத்திற்கு 
அழைத்துச் செல்வதால் அல்ல!

அதில் நான்...
உன்னைப் பற்றியே 
அதிகமாய் 
நினைக்க முடிவதால்!

வேகமாய் மறையும் 
மரங்களுக்கு இடையே...
வெகு தூரம் ஓடி வரும் 
மேகங்களுக்கு இடையே...

நீயும் என்னுடன் 
சேர்ந்து பயணிப்பதாக 
உணர்கிறேன்!

ஜன்னல் ஓரம் 
வீசும் காற்றில்...
உன் சுவாசத்தின் 
ஈரம் கலந்தே இருக்கிறது!

பயணம் முடியலாம்...
ஆனால்,
உன்னுடன் நான் 
நடத்தும் இந்த 
மனப்பயணம்...
எப்போதும் முடிவதில்லை!

*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன் 
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!