இடுகைகள்

13.வண்ணங்களின் சங்கமம் The Secret Treaty of Colours.

 13.வண்ணங்களின் சங்கமம் The Secret Treaty of Colours. நீ உடுத்தும் ஆடை வண்ணத்தில் -  அன்று நானும் உடுத்தினேன்  அதே வண்ணத்தில்! யாரும் அறியா  ஒரு ரகசிய ஒப்பந்தம்! உலகிற்கு அது -  வெறும்  ஒரே நிறத்து ஆடைகள்! உனக்கும் எனக்கும்  மட்டுமே தெரியும் -  அது ஒரே திசையில்  துடிக்கும்  இதயங்களின் அடையாளம்! நீலமோ,  சிவப்போ அல்லது  தூய வெள்ளையோ... வண்ணங்கள்  எதுவாக இருந்தாலும் -  அங்கே வெளிப்பட்டது  என்னவோ  நம் காதலின்  ஒரே வண்ணம் தான்! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

12.வாசனையாய் உன் நினைவில்... Scented Memories: A Fragrant Reminder....

 12.வாசனையாய் உன் நினைவில்... Scented Memories: A Fragrant Reminder.... உன் நினைவுகளின் ஏதோ  ஒரு மூலையில் நான் இருந்தால்  அது எனக்குப் போதும்! ஆனால் -  நான் பூசிக் கொள்ளும் வாசனைத் திரவியங்கள்  கூட உனக்கு  என் நினைவைச் சொல்கிறதாமே? அப்படியென்றால்... இன்று முதல்  நான் வாசனைத் திரவியங்களால் நீராடுகிறேன்! என் உடல் முழுவதும் இந்த வாசனையைப்  பூசிக்கொள்கிறேன்... காற்று வீசும் திசையெல்லாம் என் நினைவுகள்  உன்னை வந்து சேரட்டும்! நான் அருகில்  இல்லாவிட்டாலும் இந்த வாசனை -  உன்னிடம் என் காதலைச்  சொல்லிக் கொண்டே  இருக்கட்டும்! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026.

11. இசை‌ விருந்து! The Melodic Feast!

 11. இசை‌ விருந்து!       The Melodic Feast! இன்று இரவு - என் பசிக்காக நான் உணவு  ஏதும் உண்ணவில்லை!  வெறும் சோறு -  இந்தப் பித்துப் பிடித்த  மனதின் பசியைத் தீர்க்கவில்லை!! காற்றோடு மிதந்து  வந்த இசையையே -  அமுதமாக அருந்தினேன் இன்று!!! பாடல்கள் தந்த விருந்து; வயிறு நிறையவில்லை -  ஆனால் மனது நிறைந்து போனது!!!! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

4.மௌனத்தின் மொழி! A Poem Between Breaths!

 4.மௌனத்தின் மொழி! A Poem Between Breaths! காதல் கவிதைகள்  எழுத -  என் கை விரல்கள் இடற- எழுதாதே என்று சொல்ல -  எனது மனது மட்டும்  இடம் கொடுக்கவில்லை! மௌனத்தின் மொழி வார்த்தைகள் மௌனத்தில் உறைந்தாலும், சுவாசம் உன்னையே கவிதையாய் சுவாசிக்கிறது; பேனா முனை முடங்கிப் போனாலும், இதயத் துடிப்போ  உன் பெயரைத் தான் இடைவிடாமல்  எழுதிக் கொண்டிருக்கிறது! சொல்லத் துடிக்கும் காதலுக்கும் -  அதைச் சுமக்கத் தெரியாத காகிதத்திற்கும்  இடையே, கைவிடப்பட்ட கவிதையாய் -  நான் உன் நினைவுகளில் தத்தளிக்கிறேன்! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்  முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

10.சொல்லாதச் சொல்! The Tug of War!

  10.சொல்லாதச் சொல்! The Tug of War! “சொல்லிவிடு” -  என்று  துடியாய்த் துடித்து  இதயம்  என்னைத் தூண்டுகிறது! “சொல்லாதே” -  என்று  விளைவுகளை எண்ணி  உள்ளம் என்னைத் தடுக்கிறது! சொல்லிவிட்டால்...  என் பாரம் குறையலாம்! சொல்லாமல் போனால்...  உன் நட்பு நிலைக்கலாம்! சொல்லவா? வேண்டாமா?  வெல்லப் போவது  இதயத்தின் ஆசையா?  இல்லை...  உள்ளத்தின் எச்சரிக்கையா? இருதலைக் கொள்ளி எறும்பாய் நான்... சொல்லத் துடிக்கும் வார்த்தைகளை மௌனத்தால் மூடி வைத்து -  உன் முன்னால்  ஊமையாய் நிற்கிறேன்! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

9.நினைவுகளின் நிழல்! Shadow of Memories!

 9.நினைவுகளின் நிழல்! Shadow of Memories! “நிஜங்களின் பிரிவை விட நிழல்களின் துணையே மேலானது... நீ என்னோடு இல்லாத நேரங்களில் உன் நினைவுகள் தான் என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன!” “யாரும் இல்லாத தனிமையில் யாரோ ஒருவரின் நினைவோடு வாழ்வது சுகமானது... நீ தந்த வலிகளை விட உன் நினைவுகள் தந்த மௌனங்களையே அதிகம் காதலிக்கிறேன்!” “உலகம் என்னை தனிமை என்று சொன்னாலும் உன் நினைவுகளால் - நான் நிறைந்தே இருக்கிறேன்... பிரிவு என்பது உடலுக்குத் தான் நினைவுகளுக்கு அல்ல!” ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்  முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026.

8. சத்தங்களின் அடையாளம்! Echoes of Reality

8. சத்தங்களின் அடையாளம் Echoes of Reality  வாழ்க்கைப் பயணத்தின் சந்தடியில் - நாம்எத்தனையோ சத்தங்களைக் கடந்து போகிறோம்! காற்றோடு கரையும் பல ஓசைகளில் - சிலகாலம் கடந்தும் இதயத்தில் தங்கி விடுகின்றன! இன்று காலை  நண்பனிடம் போனில் பேசும் போது  நடுவே புகுந்தது  அந்தப் பேருந்தின் 'ஹார்ன்' சத்தம்! "அது NS விஜய் தானே?" என்று -  நான்அடுத்த நொடியே கேட்டபோது திகைத்தார் நண்பர்! கற்பனை உலகுக்கு வேண்டுமானால் -  இது வெறும்  இரைச்சலாகத் தெரியலாம்... ஆனால்  எதார்த்த உலகில் வாழும் நமக்கு -  சுற்றியுள்ள ஒவ்வொரு  சிறு அசைவும் ஓராயிரம் கவிதைகள் சொல்லும் ரகசியம்! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை : புன்னகை மன்னன்   முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026