இடுகைகள்

39. அரசு பேருந்தில் கம்பீரத்தோடு தமிழ் நாடு

39. அரசு பேருந்தில் கம்பீரத்தோடு தமிழ் நாடு  கடந்த 2012 முதல் 2014-க்கு இடைப்பட்ட காலத்திலிருந்தே, புதிய அரசுப் பேருந்துகளின் முன்பக்கம் மற்றும் பேருந்தின் இரு பக்கவாட்டிலும் எழுதப்பட்டிருந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரிலிருந்து,  "*தமிழ்நாடு*" என்ற வார்த்தை படிப்படியாக நீக்கப்படத் தொடங்கியது. 2019-க்குப் பிறகு வந்த புதிய பேருந்துகள் அனைத்திலும் அது தவிர்க்கப்பட்டு, வெறும் "*அரசுப் போக்குவரத்துக் கழகம்*" என்று மட்டுமே அச்சிடப்பட்டு வந்தது. "பேருந்தின் முகப்புப் பகுதியில் பெயர் நீளமாக இருப்பதைத் தவிர்க்கவே இந்த மாற்றம்" என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், *இது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது*. புதிய அரசு, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையையும் தமிழ் அமைப்புகளின் உணர்வுகளையும் உடனடியாகக் கருத்தில் கொண்டது. அதன் பலனாக, இன்று (ஜூன் 25, 2026) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், போக்குவரத்துத் துறை சார்பில் ரூ.127.21 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட 300 புதிய பேருந்துகளின் (164 டீசல் மற்றும் 1...

38.மழையும் மௌனமும்

38.மழையும் மௌனமும்   ஆட்சி மாற்றம்  தந்த அதிசயமோ  என்னவோ... கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு  'தடை' என்றார்கள்! இன்று அதே  அரசுப் பேருந்தின்  இரவில், அவனின் குரல்  பிரதானமாய் ஒலிக்கிறது! "*உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்து கொள்கிறேன்*..." என்று வரிகள் காற்றில் கரைய... இருள் சூழ்ந்த  ஜன்னல் கண்ணாடியில் வழிந்தோடும் மழைத்துளிகளாய்... என் விழியோரத்தில் கசிகிறது உன் நினைவுகளைச்  சுமந்த கண்ணீர்! வலிகளோடு தொடர்கிறது எனது இந்தத் தனிமைப் பயணம்! **** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்  கவிஞர் முனைவர் ரெ.சுரேஷ்குமார்

37.மௌனமாய் அழும் நினைவுகளின் நிழல் 💔

 37.மௌனமாய் அழும் நினைவுகளின் நிழல் 💔 காலை ஆறு நாற்பத்தைந்து... காற்றைக் கிழிக்கும் உங்கள் - அந்தச் ஸ்கூட்டர் சத்தம் எங்கே அப்பா? உங்கள் வருகை சொல்லித் துடிக்கும் அந்த இரும்பு வாயில் (Gate) சத்தம் - இன்று ஏனோ மௌனமாகிக் கிடக்கிறதே! வீட்டின் மூலை முடுக்கெல்லாம் - நீங்கள்  "பாப்பா... பாப்பா..." என்று உயிரைக் குழைத்துக் கூப்பிட்ட - அந்த அன்புக் குரல் கேட்கவில்லையே அப்பா! சிகரெட் வாசம் கூடச் சுகமாய் இருந்ததே - இன்று சுவாசத்தில் அந்தச் சுவடும் இல்லையே! உங்கள் குளியலுக்காக அடுப்பில்  வெந்நீர் இன்று கொதிக்கவில்லையே! வெளுத்து வாங்கிய உங்கள் வேஷ்டி சட்டைகள் - நம் துணிக்கொடியில் இன்று காயவில்லையே! தலைவாழை இலை அறுக்கவில்லை... தொடுக்கப் பூக்கள் பறிக்கவில்லை... மாங்காயும், பலாக்காயும் - உங்கள்  கை தீண்டக் காத்துக் கிடக்கின்றன! தேடிப் பார்க்கிறேன்... ஒவ்வொரு செயலிலும் உங்களைத் தேடித் தோற்றுப் போகிறேன் நான்! காலம் உங்களைக் கொண்டு போனாலும் - என் கண்ணீர்க் கூட்டுக்குள் - நீங்கள்  வாழ்ந்து கொண்டே இருப்பாய் அப்பா......😭😭💔 ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்   ...

36. ஆலத்தூர் கால்பந்தாட்ட மைதானத்து : நினைவலைகள்

36. ஆலத்தூர் கால்பந்தாட்ட மைதானத்து : நினைவலைகள்  காலங்கள் ஓடினாலும் கருத்தில் நின்ற சில நினைவுகள்... புத்தாடை மணம் வீச -  அன்று பள்ளிக்கூடம் திறந்த  அந்த முதல் நாள்! ஊரே திரண்டு நின்று உற்சாகம் பொங்கி வழிய -  எங்கள் ஆலத்தூர் கால்பந்தாட்ட விழா! பாடப் புத்தகங்கள் கற்றுத்தந்ததை விட பள்ளிக்கூடம் திறந்த அந்த நாளை -  நான் இன்றும் உயிர்ப்புடன் சுமக்கிறேன்! மைதானத்தின் புழுதி கற்றுத்தந்ததை விட ஆலத்தூர் கால்பந்து வீரர்களை -  நான் இன்றும் வியப்புடன் நினைக்கிறேன்! பள்ளி மணி அடித்தாலும் -  அன்று பறந்தோடி வீட்டுக்குச் செல்லாமல், கால்பந்துப் போட்டி ரசிப்பதற்கே -  நாங்களாய் முண்டியடித்து இடம் பிடித்த  காலமும் உண்டு! மாம்பழமும், இலந்தைப்பழமும், நாவல் பழமும் ரசித்து உண்டு, நெட்டிலிங்க மரக் காய்களை அடித்து விளையாடித் தீர்த்த அந்தக்காலம் - கனாக்காலம்! எதிரணியினர் காலில் ஷூ கட்டி வந்தாலும், மன தைரியத்தையே கவசமாய் அணிந்து, காலில் ஏதுமில்லாமல் களம் கண்ட * எட்டுப்புளிக்காடு வீரர்கள் என்றும் மறக்க முடியாதவர்கள்*! மைதானத்து கல் முற்கள் குத்தினாலும் கவலைப்படாமல் பாய்...

35.மனிதனின் அலட்சியமும் வாயில்லா ஜீவன்களின் விழிப்புணர்வும்!

 35.மனிதனின் அலட்சியமும் வாயில்லா ஜீவன்களின் விழிப்புணர்வும்! "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்றார் பாரதியார் . ஆனால், இன்றைய நவீன உலகில் ஒருபுறம் பசியால் வாடும் உயிர்கள் இருக்க, மறுபுறம் டன் கணக்கில் உணவுகள் வீணாக்கப்பட்டு குப்பையில் கொட்டப்படும் அவலம் தொடர்ந்து நீடிக்கிறது.  இன்று அதிகாலை 18.05.2026 நெடுஞ்சாலை ஓரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வடைகள் கொட்டப்பட்டிருந்ததும், அதை நாய்கள் தீண்டாமல் தவிர்த்ததும் மனித சமுதாயத்திற்கு ஒரு மிகப்பெரிய பாடத்தை உணர்த்தியுள்ளது. மனிதனின் அலட்சியமும் உணவு வீணாதலும் அதிகாலைப் பொழுதில் நெடுஞ்சாலை ஓரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வடைகள் கொட்டப்பட்டுக் கிடந்த காட்சி, மனிதர்களின் பொறுப்பற்ற தனத்திற்கு ஒரு சான்றாகும்.  உணவு நன்றாக, சூடாக இருக்கும் போதே அதை பசியோடு இருக்கும் ஏழைகளுக்கோ அல்லது சாலையோர விலங்குகளுக்கோ கொடுக்கும் எண்ணம் பலருக்கு வருவதில்லை. அது முழுமையாகக் கெட்டுப்போய், தனக்குப் பயன்படாது என்ற நிலை வந்த பிறகே அதை அப்புறப்படுத்த நினைக்கிறார்கள். நாய்களின் உன்னத உள்ளுணர்வு  பசியால் வாடும் சாலையோர நாய்கள்...

34.நனைவதற்கல்ல மழை... வாழ்வதற்கும் கூட! 🌧️🔥

34.நனைவதற்கல்ல மழை... வாழ்வதற்கும் கூட! 🌧️🔥 நேற்று மாலை (14.05.2026) பட்டுக்கோட்டை நோக்கி எனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். வானம் மேகமூட்டத்துடன் லேசானத் தூறலைப் பொழிந்து கொண்டிருந்தது. சட்டென்று மழை வலுத்துவிடுமோ என்ற பயத்தில், "நனைந்துவிடக் கூடாது, என்ற பதற்றத்தில் வண்டியின் வேகத்தை அதிகரித்தேன்.  சாலையில் மற்றவர்களை முந்திக் கொண்டு என் இலக்கை நோக்கியே என் கண்கள் இருந்தன. ஆனால், வழியோரம் நான் கண்ட ஒரு காட்சி, என் மனச்சாட்சியை உலுக்கியது; வண்டியின் வேகம் தானாகவே குறைந்தது. சாலையோரத்தில் தற்காலிகக் கூடாரம் அமைத்துத் தங்கியிருக்கும் அந்த நாடோடி மக்கள், பெய்து கொண்டிருந்த மழையில் நனைந்து கொண்டே சமையல் செய்து கொண்டிருந்தார்கள்.  நான் நனையாமல் இருக்க ஓடினேன்; அவர்களோ நனைந்து கொண்டே அடுப்பு அணையாமல் இருக்கப் போராடிக் கொண்டிருந்தார்கள்.  * எனக்கு நனைந்தால் சளி பிடிக்கும் என்ற கவலை; அவர்களுக்கு அடுப்பு நனைந்தால் அன்று இரவு பட்டினி என்ற எதார்த்தம். மழைத்துளிகள் அவர்கள் பாத்திரத்தில் விழுந்து கொண்டிருக்க, அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் காட்டிய அந்த நிதானம் எனக்கு ஒ...

33.காலச் சக்கரம்: ஒரு பேருந்து பயணத்தின் பாடம்

 33.காலச் சக்கரம்: ஒரு பேருந்து பயணத்தின் பாடம் வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம். அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்களும், அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகளும் சில நேரங்களில் மிகப்பெரிய உண்மைகளை நமக்கு உணர்த்திச் செல்லும். நேற்று நான் மேற்கொண்ட பேருந்து பயணமும் அப்படித்தான் ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. பேருந்தில் எனக்கு அருகில் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர் தனது கைபேசியில் யாரிடமோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார். உரையாடலின் ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்த நிதானம் குறையத் தொடங்கியது. அவரது வார்த்தைகளில் தெரிந்த அந்த நிதானமற்ற போக்கு (மது அருந்தி இருந்தார் ) , அவர் தன்னிலை மறந்து பேசுகிறார் என்பதை எனக்கு உணர்த்தியது, அவர் தன்னுணர்வு இன்றி இருக்கிறார் என்பது புரிந்தது. சட்டென்று கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர், மறுமுனையில் இருந்தவரைப் பார்த்து, "என்ன... உன் வீட்டுப் பண்ணைக்காரனா நானு?" என்று ஒரு கேள்வியைக் கேட்டார். அவர் அந்த வார்த்தையை ஏதோ மற்றவரைத் தாழ்த்திப் பேசுவதாக நினைத்துக் கேட்டார். ஆனால், அந்த வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் காலத்தின் விளையாட்டை அவர் உணரவில்லை. ஒரு...