39. அரசு பேருந்தில் கம்பீரத்தோடு தமிழ் நாடு
39. அரசு பேருந்தில் கம்பீரத்தோடு தமிழ் நாடு
கடந்த 2012 முதல் 2014-க்கு இடைப்பட்ட காலத்திலிருந்தே, புதிய அரசுப் பேருந்துகளின் முன்பக்கம் மற்றும் பேருந்தின் இரு பக்கவாட்டிலும் எழுதப்பட்டிருந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரிலிருந்து,
"*தமிழ்நாடு*" என்ற வார்த்தை படிப்படியாக நீக்கப்படத் தொடங்கியது. 2019-க்குப் பிறகு வந்த புதிய பேருந்துகள் அனைத்திலும் அது தவிர்க்கப்பட்டு, வெறும் "*அரசுப் போக்குவரத்துக் கழகம்*" என்று மட்டுமே அச்சிடப்பட்டு வந்தது. "பேருந்தின் முகப்புப் பகுதியில் பெயர் நீளமாக இருப்பதைத் தவிர்க்கவே இந்த மாற்றம்" என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், *இது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது*.
புதிய அரசு, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையையும் தமிழ் அமைப்புகளின் உணர்வுகளையும் உடனடியாகக் கருத்தில் கொண்டது.
அதன் பலனாக, இன்று (ஜூன் 25, 2026) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், போக்குவரத்துத் துறை சார்பில் ரூ.127.21 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட 300 புதிய பேருந்துகளின் (164 டீசல் மற்றும் 136 சிஎன்ஜி பேருந்துகள்) சேவையை *முதலமைச்சர் விஜய் அவர்கள்* கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இன்று பயன்பாட்டிற்கு வந்துள்ள இந்த 300 புதிய பேருந்துகளின் முகப்புப் பக்கம் (Front) மட்டுமன்றி, பேருந்தின் இரு பக்கவாட்டிலும் (Sides) பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு இணங்க "*தமிழ்நாடு அரசு*" என்ற பெயர் மீண்டும் கம்பீரமாகப் பொறிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டின் அடையாளத்தை அரசுப் பேருந்துகளில் மீட்டெடுத்துள்ளது.
*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026
கருத்துகள்
கருத்துரையிடுக