38.மழையும் மௌனமும்

38.மழையும் மௌனமும் 

ஆட்சி மாற்றம் 
தந்த அதிசயமோ 
என்னவோ...
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு 
'தடை' என்றார்கள்!

இன்று அதே 
அரசுப் பேருந்தின் 
இரவில்,
அவனின் குரல் 
பிரதானமாய் ஒலிக்கிறது!

"*உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்து கொள்கிறேன்*..." என்று
வரிகள் காற்றில் கரைய...

இருள் சூழ்ந்த 
ஜன்னல் கண்ணாடியில்
வழிந்தோடும் மழைத்துளிகளாய்...

என் விழியோரத்தில் கசிகிறது
உன் நினைவுகளைச் 
சுமந்த கண்ணீர்!

வலிகளோடு தொடர்கிறது
எனது இந்தத் தனிமைப் பயணம்!

****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன் 
கவிஞர் முனைவர் ரெ.சுரேஷ்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!