இடுகைகள்

46.இயற்கையின் மூவர் அணி: எங்கள் வரலாற்றுத் துறையின் பசுமையான வரவேற்பு.

46.இயற்கையின் மூவர் அணி: எங்கள் வரலாற்றுத் துறையின் பசுமையான வரவேற்பு கல்வி நிலையங்கள் வெறும் அறிவைத் தேடும் இடங்கள் மட்டுமல்ல; இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக்கொடுக்கும் உன்னதக் கூடங்களும் ஆகும். எங்கள் கல்லூரியின் வரலாற்றுத் துறைக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும், ஒரு காலப் பயணத்திற்குள் நுழைவது போன்ற உணர்வைத் தரும். அந்தப் பயணத்தின் நுழைவாயிலில் எங்களை இன்முகத்தோடு வரவேற்க ஒரு பிரம்மாண்டமான 'மூவர் அணி' தினமும் காத்து நிற்கிறது.  வரலாற்றுத் துறை கட்டடத்தின் முன்னே, ஆலம் மரம், அரச மரம் மற்றும் வேப்ப மரம் ஆகிய மூன்றும் ஒரே வரிசையில் கம்பீரமாக அணிவகுத்து நிற்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.  கல்விக் கோயிலில் ஒரு தினசரி வலம் பொதுவாக, இறைவனின் ஆசியைப் பெறுவதற்காக மக்கள் பக்தி சிரத்தையுடன் கோயில்களில் உள்ள அரச மரத்தைச் சுற்றி வருவது வழக்கம். ஆனால் நாங்களோ, ஆன்மீகக் கோயிலுக்குச் சென்று அரச மரத்தைச் சுற்றுவதை விட, அறிவை வழங்கும் இந்த ' கல்விக் கோயிலில்' இருக்கும் இந்த மரங்களை வாரத்தில் ஐந்து நாட்களும் தவறாமல் சுற்றி வருகிறோம் . இது வெறும் நடைப்பயணம் அல்ல; இயற்கையையும், எங்களுக்கு அ...

45.மாறிப்போகும் முன்னுரிமைகள்

45. மாறிப்போகும் முன்னுரிமைகள்  நான் நேற்று (20.07.2026) மாலை சாலையில் நடந்து செல்லும் பொழுது அண்ணனுக்கு 10 வயது, தம்பிக்கு 6 வயது இருக்கும். அண்ணன் தம்பியிடம் சொல்கிறான், " உனக்கு என்ன வேண்டும் கேள், நான் வாங்கித் தருகிறேன்" என்று . சொல்கிறான். இதை நான் கேட்கும் பொழுது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், எதிர்காலத்தில் இது சாத்தியமில்லை என்று எனக்குள் சிரித்துக்கொண்டே கடந்து வந்தேன். அந்தச் சிறுவனின் வார்த்தைகளில் எந்தக் கள்ளமும் இல்லை, எந்தப் பொருளாதாரக் கணக்கீடுகளும் இல்லை. தன் தம்பிக்கு இந்த உலகத்தையே வாங்கித் தர வேண்டும் என்ற மாசற்ற அன்பு மட்டுமே அங்கே நிறைந்திருந்தது. 'என்னால் முடியுமா?' என்ற கேள்வியை விட, 'என் தம்பிக்கு நான் செய்வேன்' என்ற உரிமையே அந்த அண்ணனிடம் மேலோங்கி நிற்கிறது. ஆனால், அந்தச் சிறுவனின் பேச்சைக் கேட்டு எனக்குள் மலர்ந்த அந்தச் சிரிப்பு, வாழ்க்கையின் கசப்பான எதார்த்தத்தை உணர்த்திய சிரிப்பு. வளரும்போது மனிதர்கள் எப்படி மாறுகிறார்கள், சூழ்நிலைகள் எப்படி உறவுகளைத் திசைதிருப்புகின்றன என்பதை காலம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. நாளை அ...

44.தேர்வு அறையில் அம்மா

44.தேர்வு அறையில் அம்மா கல்லூரி வளாகத்தில் தேர்வு எழுதும் அம்மா... கையில் பேனா, முன்னால் வினாத்தாள்; ஆனால், மனம் முழுவதும் அருகில் விளையாடும் குழந்தையிடமே. திடீரென குழந்தை அழும் சத்தம்... எந்த வினாவும் நினைவில் நிற்கவில்லை; எந்த விடையும் மனதில் தோன்றவில்லை. பதற்றத்தோடு இருக்கையை விட்டு எழுந்து, தாய்மையை மட்டும் தழுவிக்கொண்டு குழந்தையைத் தேடி ஓடினாள். அவளுக்குத் தேர்வை விட பெரியது ஒரே ஒரு பொறுப்பு... "அம்மா" என்ற ஆயுள் முழுதும் தொடரும் தேர்வு! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை  புன்னகை மன்னன்  முனைவர் ரெ.சுரேஷ்குமார்

43.படைப்பின் புதிய பாதை

 43.படைப்பின் புதிய பாதை வகுப்பறைகள் வெறும் பாடங்களை மட்டும் கற்றுத் தரும் இடங்கள் அல்ல; பல சுவாரஸ்யமான வாழ்க்கை அனுபவங்களையும், தலைமுறை மாற்றங்களையும் நமக்கு நேருக்கு நேராக உணர்த்தும் இடங்கள்.  சமீபத்தில் என்னுடைய மாணவனிடம் நான் எழுதிய ஒரு கவிதையைப் படிக்கக் கொடுத்தேன். பொறுமையாக அதைப் படித்து முடித்தவன், மிக இயல்பாகவும் நேர்மையாகவும் ஒரு கருத்தைச் சொன்னான்:  *"கவிதை ரொம்ப நல்லா இருக்கு ஐயா! ஆனா, படிப்பதற்கு ரொம்ப நீளமா இருக்கு... நறுக்கென்று ஒரு ஹைக்கூ கவிதை கொடுங்களேன்!"* அவன் சொன்ன அந்த ஒற்றை வரியில், இன்றைய இளைய தலைமுறையின் ஒட்டுமொத்த மனநிலையும் அடங்கியிருந்தது. ஒருகாலத்தில் பக்கக் கணக்கில் காவியங்களும், நெடிய கவிதைகளும் வாசிக்கப்பட்டன. ஆனால், இன்றைய வேகமான காலகட்டத்தில் எல்லாமே 'ஷார்ட் அண்ட் ஸ்வீட்' (Short and sweet) ஆக இருக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  அவர்களுக்கு நேரமில்லை என்பதை விட, சுருக்கமான வார்த்தைகளில் ஆழமான கருத்துக்களைப் பெறவே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதை அவனது பதில் எனக்கு உணர்த்தியது.  அவனுடைய அந்தச் நேர்மையான வ...

42.உறங்காத விதைகள்!

42.உறங்காத விதைகள் ! விதைத்தவன் உறங்கலாம்... நிலத்தில்  விதைகளுக்கு உறக்கமில்லை! இரவில்  நான் தூவிய சிந்தனை, நான் கண்மூடிய பிறகும் விழித்திருந்து அலைகடல்  தாண்டிப் பயணித்திருக்கிறது! உடலுக்குத்தான் உறக்கம்... உயிருள்ள எழுத்துகளுக்கல்ல! ***** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை  புன்னகை மன்னன்  முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

41.தொலைந்த சிந்தனையும்... தொடரும் தேடலும்!

 41 .தொலைந்த சிந்தனையும்... தொடரும் தேடலும்! நன்றாகச் சிந்தித்து வைத்த ஒரு அருமையான கவிதை வரிகள் திடீரென மறந்துவிட்டது. "எதை மறந்தோம்?" என்று மூளையைக் கசக்கித் தேடிக்கொண்டிருந்தபோது, சட்டென்று நினைவுக்கு வந்தது ' துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் வரும் அந்த அழகிய பாடல் வரி... *"பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே!"* உண்மைதான்...  மறந்த சிந்தனையைத் தேடும்  அந்தத் தவிப்பும் ஒரு கவிதைதான்!  தேடிவந்த சிந்தனை  உருவமில்லாக் காற்றைப் போல  எங்கோ தொலைந்துவிட்டது!  எதைத் தேடுகிறோம் என்று  தெரியாமலேயே அதைத் தேடித் தேடி  என் மனமும் தொலைகிறதே! தொலைந்த அந்தச் சிந்தனை  மீண்டும்  கிடைக்குமோ கிடைக்காதோ... ஆனால்,  அந்தத் தேடலின் தவிப்பில் இப்போது புதிதாய் ஒரு கவிதை பிறந்துவிட்டதே! *** ஆக்கம் மற்றும் பதிப்புரிமை  புன்னகை மன்னன்  முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

40. 👁️ சாலையோரச் சிந்தனை: உடைந்த கண்ணாடியும் உலகத் தத்துவமும்!

40. 👁️ சாலையோரச் சிந்தனை: உடைந்த கண்ணாடியும் உலகத் தத்துவமும் ! இன்று சாலையில் நடந்து செல்லும் பொழுது ஒரு விசித்திரமான காட்சியைக் காண நேரிட்டது.   சாலையோரம் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. அதில் விதவிதமான 'கண் கண்ணாடிகள்' விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஊரின் மங்கலான பார்வையைத் தெளிவாக்க, மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கக் காத்திருந்தன அந்தக் கண்ணாடிகள்.   ஆனால், எதேச்சையாக அந்தக் காரின் முகப்புக் கண்ணாடியைப் பார்த்தேன்... அது விரிசல் விட்டு உடைந்திருந்தது!  எவ்வளவு பெரிய முரண்! மற்றவர்களின் குறையைத் தீர்க்கும் கண்ணாடிகளைச் சுமந்து செல்லும் அந்தக் காரால், தன் சொந்தக் கண்ணாடி உடைவதைத் தடுக்க முடியவில்லை.  ஊருக்கு ஆறுதல் சொல்லும் பலருடைய சொந்த வாழ்க்கை, இப்படித்தான் அமைதியாகக் காயங்களைச் சுமந்து கொண்டிருக்கிறதோ என என் மனம் சில நொடிகள் கனத்துப் போனது! 🍂 --- ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன்  முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026