51.காலத்தோடு ஒரு கவிதைப் பயணம்

51.காலத்தோடு ஒரு கவிதைப் பயணம் 

இரவின் மடியில் 
காலத்தின் பயணம்,
ஒன்பது ஒன்பதில் (09.09) தொடங்கிய 
என் விழிப்பயணம்.
பத்து பத்தில் (10.10) தொடர்ந்தது,
பதினொன்று பதினொன்றில் (11.11) பற்றிக்கொண்டது,
பன்னிரண்டு பன்னிரண்டை (12.12) 
மெல்லக் கடந்து...

பின்னணியில் 
மெல்லிய இசையாக, 
"நினைத்த வரம் கேட்டு..." பாடல் ஒலிக்க,
அந்த வரிகளோடு 
என் மனதின் 
ஆசைகளும் 
சிறகு விரிக்க,
விண்மீன்கள் 
சாட்சியாக 
என் வேண்டுதல்களை 
முன்வைக்கிறேன்.

எண்கள் 
இணையும் 
இந்த விந்தையான 
தருணத்தில்,
என் 
எண்ணங்களும் 
நிச்சயம் ஈடேறும் 
என்ற நம்பிக்கையோடு,
இசையோடு 
இணைந்து 
மலர்கிறது 
என் 
இந்த இரவுப் பதிவு!

****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை 
புன்னகை மன்னன் 
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!