17. வேஷங்களின் உலகம் The World of Masquerades
17. வேஷங்களின் உலகம்
“உலகமே ஒரு நாடக மேடை” - என்று
அன்றே சொல்லிவிட்டுப் போனார்கள்!
அதனால் தானோ என்னவோ...
முகமூடி அணிந்து
நன்கு நடிப்பவர்களுக்கு மட்டுமே - இங்கே
மரியாதையும், மாலைகளும் குவிகின்றன!
சொல் ஒன்று...
செயல் ஒன்று...
மனதில் ஒன்று...
என
வேடம் தரிப்பவர்கள்
வெற்றியாளர்களாகக் கொண்டாடப்படுகிறார்கள்!
ஆனால்...
நடிக்கத் தெரியாமல்...
உண்மையை மறைக்கத் தெரியாமல்...
மனதில் உள்ளதை
அப்படியே பேசும் நேர்மையாளனை –
இந்தச்
சமுதாயம்
குப்பைத் தொட்டி என ஒதுக்கி வைக்கிறது!
நீ உண்மையாக இருந்தால் - உனக்கு
உறவுகள் இருக்காது!
நீ நடிக்கத் தெரிந்தால் - உன்னைச் சுற்றி
நிழல்கள் ஓயாது!
உண்மை என்பது
இங்கே ஒரு பலவீனம்!
நடிப்பு என்பது
வெற்றிக்கான ஒரு மூலதனம்!
*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026
கருத்துகள்
கருத்துரையிடுக