18.அவள் மொழி.... Warmth in Every Grain.....

 18.அவள் மொழி....
Warmth in Every Grain.....

ருசி என்பது நாவிலில்லை
உன் வார்த்தையில் 
தான் இருக்கிறது!

"சூடான தயிர் சாதம் பிடிக்கும்"
என நீ சொன்ன ஒற்றைச் சொல்லில்... 
என் நெடுங்காலப் பழக்கம் 
நிலைகுலைந்து போனது!

இன்று மூன்று வேளையும் 
அதே சூடான தயிர் சாதம் தான்... 
தயிர் சாதம் சூடாக இருப்பதால் அல்ல, 
அதில் உன் விருப்பம் 
சூடாக இருப்பதனால்!

ஒவ்வொரு பருக்கையிலும் 
உன் நினைவைச் சேர்த்து, 
உன் காதலை 
ரசித்து உண்ணுகிறேன்!

*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன் 
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!