14. சுழற்சிப் பயணம் The Cycle of Journey

14. சுழற்சிப் பயணம்

The Cycle of Journey

பேருந்துச் சக்கரம் சுழல,
கடிகார முள்ளும் சுழல,

காலச்சக்கரம் சுழல - இடையில்
கழிகிறது நம் வாழ்க்கை பயணம்.

சுழலும் சக்கரத்தின் வேகத்தில்
தொலைந்து போகிறது தூரம்;
துரத்தும் முள்ளின் ஓட்டத்தில்
கரைந்து போகிறது நேரம்!

சுவடுகள் மாறும் பாதையில்
நிழலாய் தொடரும் காலம்;
பயணங்கள் முடிவதே இல்லை,
பயணிகள் மாறுவதே கோலம்!

*****

ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!